Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

இவருக்கும் அவரது மாமியாருக்கும் ஒரே வயது.! பிரேம்ஜியை கலாய்த்த பிரபலம்.!!

Advertiesment
Premji

Senthil Velan

, வியாழன், 13 ஜூன் 2024 (20:45 IST)
பிரேம்ஜிக்கும் அவரது மனைவியின் அம்மாவுக்கு ஒரே வயது தான் என்று பிரபல சினிமா பத்திரிக்கையாளர் அந்தணன் கூறியது தற்போது சமூக வலைதளங்களில் பேசும் பொருளாக மாறி உள்ளது.
 
1979ம் ஆண்டு பிப்ரவரி 25ஆம் தேதி கங்கை அமரனுக்கு மகனாக பிறந்தவர் பிரேம்ஜி. அவரது அண்ணன் வெங்கட் பிரபு 2001 ஆம் ஆண்டு ராஜலட்சுமி என்பவரை திருமணம் செய்து கொண்டார். வெங்கட் பிரபுக்கு ஷிவானி பிரபு என்கிற வயதுக்கு வந்த மகள் உள்ளார். 45 வயதில் நடிகர் பிரேம்ஜி காதலித்து திருமணம் செய்துள்ளார். அவர் திருமணம் செய்த இந்துவின் வயது 25 தான் என அதிர்ச்சியை கிளப்பி உள்ளனர்
 
கொரோனா காலத்தில் சமூக வலைத்தளத்தின் மூலம் ஏற்பட்ட நட்பு காரணமாக இந்து மற்றும் பிரேம்ஜி காதலிக்கத் தொடங்கினர். அதன் பின்னர் இருவரும் கடந்த ஜூன் 9-ஆம் தேதி  திருத்தணி முருகன் கோயிலில் திருமணம் செய்து கொண்டனர். பிரேம்ஜி திருமணத்தில் நெருங்கிய உறவினர்களும் அவரது நண்பர்களும் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.
 
webdunia
இந்நிலையில்  பிரபல சினிமா பத்திரிக்கையாளர் அந்தணன், பிரேம்ஜி திருமணம் குறித்து பேசியுள்ளார்.  பிரேம்ஜி நல்ல மனிதர் என்றும் அவருக்கு இருக்கும் ஒரே கேட்ட பழக்கம் குடிப்பழம் மட்டும் தான் என்றும் தெரிவித்துள்ளார். 
 
பிரேம்ஜி இந்து என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டதாக குறிப்பிட்ட அவர், காதலுக்கு கண் இல்லை என்று சொல்வார்கள் அது போல, பிரேம்ஜிக்கும் அவரது மனைவியின் அம்மாவுக்கு ஒரே வயது தான் என்று கூறியுள்ளார். இருந்தாலும் இந்துவுக்கு பிரேம்ஜி மீது காதல் ஏற்பட்டு திருமணம் செய்து கொண்டதாக அந்தணன் தெரிவித்துள்ளார். 

பிரேம்ஜிக்கும் அவரது மனைவிக்கும் 20 வயது வித்தியாசம் என்கிற தகவல் சமீபத்தில் வெளியான நிலையில், பிரேம்ஜிக்கும் அவரது மாமியாருக்கும் ஒரே வயதா? என ரசிகர்கள் கேட்டு "என்ன கொடுமை சரவணன்" என கமெண்ட் போட்டு வருகின்றனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இப்படி திருடிதான் படம் எடுக்கணுமா? – கல்கி 2898 படக்குழு மீது ஹாலிவுட் கிராபிக் டிசைனர் புகார்!