Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பிரேம்ஜியை திருமணம் செய்யும் பெண் இவர்தான்… வெங்கட் பிரபு வெளியிட்ட புகைப்படம்!

Advertiesment
பிரேம்ஜியை திருமணம் செய்யும் பெண் இவர்தான்… வெங்கட் பிரபு வெளியிட்ட புகைப்படம்!

vinoth

, ஞாயிறு, 9 ஜூன் 2024 (06:30 IST)
இயக்குனர் வெங்கட்பிரபுவின் தம்பியும், பழம்பெரும் இயக்குனர் மற்றும் இசையமைப்பாளர் கங்கை அமரனின் இரண்டாவது மகனுமான பிரேம்ஜி அமரன் தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகராக அறியப்படுபவர். அதுமட்டுமில்லாமல் அவர் இசையமைப்பாளராகவும், பாடகராகவும் சில படங்களில் பணியாற்றியுள்ளார்.

40 வயது கடந்தும் சிங்கிளாக இருந்து வந்த பிரேம்ஜிக்கு எப்போதுதான் திருமணம் நடக்கும் என அவரது ரசிகர்களும் சினிமா உலகினரும் கங்கை அமரன் மற்றும் வெங்கட் பிரபு ஆகியோரிடம் அடிக்கடி கேட்கப்பட்டது.  இதையடுத்து அவருக்கு இன்று திருத்தணி கோயிலில் இந்து என்ற பெண்ணோடு திருமணம் நடக்கிறது.

பிரேம்ஜி திருமணம் செய்யப் போகும் யார் என்பதை இதுவரை ரகசியமாக வைத்திருந்த நிலையில் வெங்கட்பிரபு மணமக்களின் நிச்சயதார்த்த புகைப்படத்தை வெளியிட, அவர்களுக்கு வாழ்த்து மழை குவிந்து வருகிறது.

 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

திஷா பதானியின் கண்கவர் போட்டோ ஆல்பம்!