Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சுதா கொங்கரா& kGF தயாரிப்பு நிறுவனத்தின் புதிய படம்… இசையமைப்பாளர் இவரா?

சுதா கொங்கரா&  kGF  தயாரிப்பு நிறுவனத்தின் புதிய படம்… இசையமைப்பாளர் இவரா?
, வியாழன், 21 ஏப்ரல் 2022 (20:22 IST)
இறுதிச்சுற்று மற்றும் சூரரைப்போற்று ஆகிய வெற்றி படங்களை இயக்கிய இயக்குனர் சுதா கொங்கராவின் அடுத்த படம் குறித்த அறிவிப்பு இன்று காலை வெளியானது.

நடிகர் யாஷ் நடித்த கேஜிஎப் மற்றும் கேஜிஎப் 2 ஆகிய இரண்டு சூப்பர் ஹிட் படங்களை இயக்கிய Hombale Films என்ற நிறுவனம் சுதா கொங்காரே இயக்கும் அடுத்த திரைப்படத்தை தயாரிக்க உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது .

இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என்றும் இந்த படத்தில் நடிக்கும் நடிகர் நடிகையர் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த அறிவிப்பு எதுவும் இந்த அறிவிப்போடு வெளியாகவில்லை.

இந்நிலையில் இந்த பட அறிவிப்புக் குறித்து வெளியான போஸ்டரை சுதா கொங்கராவின் ஆஸ்தான இசையமைப்பாளர்களில் ஒருவரான ஜி வி பிரகாஷ் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இதையடுத்து அவர்தான் இந்த படத்துக்கும் இசையமைப்பாளராக பணியாற்ற உள்ளார் என்ற கருத்துகள் எழுந்துள்ளன.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஸ்ரீசாந்துக்கு இந்த வேடமா… காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தின் செம்ம அப்டேட்!