நடிகை தமன்னாவுக்கு கொரோனா தொற்று ஏற்பட்ட நிலையில் அவர் இப்போது தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.
 
									
			
			 
 			
 
 			
			                     
							
							
			        							
								
																	கடந்த ஆகஸ்ட் மாதத்தில் தனது பெற்றோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருப்பதாக தமன்னா தனது சமூகவலைதள பக்கத்தில் பதிவிட்டிருந்தார். இந்நிலையில் தற்போது தமன்னாவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாகவும், ஹைதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவர் சிகிச்சை பெற்று வருகிறார் என்பது அனைவரும் அறிந்ததே.
 
									
										
			        							
								
																	ஆனால் மருத்துவமனையில் தமன்னாவுக்கு சில பிரச்சனைகள் ஏற்பட்டதால் அவர் இப்போது தீவிர சிகிச்சைப் பிரிவில் வைக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுவதாக இணையத்தில் ஒரு செய்தி பரவி வருகிறது. ஆனால் இதன் உண்மைத் தன்மை குறித்து தமன்னா தரப்பில் இருந்து எந்த ஒரு தகவலும் வெளியாகவில்லை.