Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

அமெரிக்காவை அச்சுறுத்தும் மூளை உண்ணும் நுண்ணுயிர் - கோவிட் 19-க்கு மத்தியில் மற்றொரு போராட்டம்

அமெரிக்காவை அச்சுறுத்தும் மூளை உண்ணும் நுண்ணுயிர் - கோவிட் 19-க்கு மத்தியில் மற்றொரு போராட்டம்
, திங்கள், 28 செப்டம்பர் 2020 (10:18 IST)
அமெரிக்காவில் கொரோனா வைரஸ் தொற்றின் காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை இரண்டு லட்சத்தை கடந்துள்ளது. அந்த நாடு கொரோனாவுடன் போராடிக் கொண்டிருக்கும் நேரத்தில் அங்கு புதிதாக மற்றொரு பிரச்சனை முளைத்துள்ளது.

டெக்சாஸ் மாகாணத்தின் லேக் ஜேக்ஸன் பகுதி மக்கள் குழாய் தண்ணீர் பயன்படுத்துவது தொடர்பாக எச்சரிக்கப்பட்டுள்ளனர். அதாவது மூளையை உண்ணும்  நுண்ணுயிர்கள் குழாய் நீரில் இருப்பதாக நகர் குடிநீர் விநியோக துறை எச்சரித்து உள்ளது.
 
மூளையை உண்ணும் நுண்ணுயிர்கள் என்று அழைக்கப்படும் ’நைல்கிரீய பெளல்ரி’ இருப்பது குடிநீர் விநியோக அமைப்பில் உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த நுண்ணுயிர் மரணத்தைக் கூட ஏற்படுத்தலாம்.
 
இது போன்ற நோய் தொற்றுகள் அரிதாகவே அமெரிக்காவில் ஏற்பட்டுள்ளன. அதாவது 2009 - 2018 இடையிலான பத்தாண்டு காலகட்டத்தில் 34 பேருக்கு மட்டுமே இந்த தொற்று ஏற்பட்டுள்ளது.
 
குடிநீரை சுத்திகரித்து வழங்குவதாக கூறும் லேக் ஜேக்சன் குடிநீர் விநியோக துறை, இது சரியாக எத்தனை நாட்கள் ஆகும் என தெரியவில்லை என கூறி உள்ளது.
 
கழிவறைக்கு மட்டுமே இந்த நீரை பயன்படுத்துமாறும் வேறு எதற்கும் பயன்படுத்த கூடாது என்றும் கடந்த வாரம் வெள்ளிக்கிழமை இரவு டெக்சாஸின் சில பகுதிகளுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இந்த எச்சரிக்கை பின்னர் ரத்து செய்யப்பட்டது என்றாலும், லேக் ஜேக்சன் பகுதியில் மட்டும் இந்த எச்சரிக்கை  நீட்டிக்கிறது. அங்கு 27 ஆயிரம் பேர் வசிக்கின்றனர்.
 
தண்ணீரை கொதிக்க வைத்து பயன்படுத்துமாறு அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர். குளிக்கும் போது தண்ணீர் மூளைக்குள் போகாதப்படி பார்த்து கொள்ளுமாறும் மக்கள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

Share this Story:

வெப்துனியாவைப் படிக்கவும்

செய்திகள் ஜோ‌திட‌ம் சினிமா மரு‌த்துவ‌ம் மேலோங்கிய..

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மேலும் ஒரு திமுக எம்.எல்.ஏவுக்கு கொரோனா தொற்று: மருத்துவமனையில் அனுமதி!