Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அதிதி ஷங்கரை தாக்கி பதிவிட்டாரா பிரபல நடிகை… வைரலாகும் பதிவு!

Webdunia
வெள்ளி, 5 ஆகஸ்ட் 2022 (15:04 IST)
மீசைய முறுக்கு திரைப்படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் ஆத்மிகா.

அந்த படம் போதுமான அளவுக்கு கவனம் பெற்றாலும், அவருக்கு பெரிய அளவில் அடுத்தடுத்து வாய்ப்புகள் அமையவில்லை. தற்போது காட்டேரி படத்தில் நடித்துள்ளார். அந்த படம் இன்று ரிலீஸ் ஆகியுள்ளது. இந்நிலையில் சமீபத்தில் அவர் சமூகவலைதளத்தில் இட்ட பதிவு இணையத்தில் கவனம் பெற்றுள்ளது.

அதில் “அதிர்ஷ்டசாலிகள் எளிதாக ஏணியில் ஏறி மேலே சென்றுவிடுகிறார்கள். மற்றவர்கள்… பாத்துக்கொள்ளலாம்” என பதிவிட்டுள்ளார். இந்த பதிவில் அவர் இயக்குனர் ஷங்கரின் மகளான அதிதியைதான் குறிப்பிடுகிறார் என ரசிகர்கள் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

ஷங்கரின் மகளான அதிதி முதல் படத்திலேயே கார்த்திக்கு ஜோடியானார். அதையடுத்து இரண்டாவது படமாக சிவகார்த்திகேயன் உடன் ‘மாவீரன்’ படத்தில் நடிக்கிறார். அடுத்தடுத்து முன்னணி நடிகர்களின் பட வாய்ப்புகளை வாரிசு நடிகையான அதிதி பெறுவதைக் குறிப்பிட்டுதான் ஆத்மிகா இவ்வாறு பதிவிட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

ரித்திகா சிங்கின் லேட்டஸ்ட் ஸ்டன்னிங் லுக் போட்டோஷூட் ஆல்பம்!

ஸ்கின் கலர் ட்ரஸ்ஸில் ஜான்வி கபூரின் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

சுதா கொங்கரா & துருவ் விக்ரம் படத்தை தயாரிப்பது யார்? வெளியான தகவல்!

ரி ரிலீஸ் பட்டியலில் இணைந்த சூர்யா & தனுஷின் சூப்பர்ஹிட் படங்கள்!

நயன்தாராவின் மலையாள பட பூஜை புகைப்படங்கள்… இணையத்தில் வைரல்!

அடுத்த கட்டுரையில்
Show comments