Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சிவகார்த்திகேயனின் ‘மாவீரன்’ படத்தில் மிஷ்கின்: அதிகாரபூர்வ அறிவிப்பு

Myskin
, புதன், 3 ஆகஸ்ட் 2022 (19:37 IST)
சிவகார்த்திகேயன் நடிக்க இருக்கும் அடுத்த திரைப்படமான மாவீரன் படத்தின் அறிவிப்புகள் இன்று காலை முதல் வெளியாகி கொண்டிருக்கின்றன என்பதை பார்த்து வருகிறோம் 
 
குறிப்பாக மாவீரன் படத்தில் சிவகார்த்திகேயன் ஜோடியாக இயக்குனர் ஷங்கரின் மகள் அதிதி ஷங்கர் நடிக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டது
 
 இதனை அடுத்து இந்த படத்தில் பழம்பெரும் நடிகை சரிதா நடிக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகின
 
இந்த நிலையில் சற்று முன் இந்த படத்தில் நடிக்க நடிகரும் இயக்குனருமான மிஷ்கின் நடிக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டது. இவர் இந்த படத்தில் வில்லனாக நடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது
 
சாந்தி டாக்கீஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த படம் தமிழ் தெலுங்கு ஆகிய மொழிகளில் ஒரே நேரத்தில் படமாக்கத் திட்டமிடப்பட்டுள்ளது
 
மண்டேலா படத்தை இயக்கிய மடோன் அஸ்வின் இந்த படத்தை இயக்கவுள்ளார் இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அஜித் சினிமாவில் அறிமுகமாகி 30 ஆண்டுகள் நிறைவு...ரசிகர்கள் கொண்டாட்டம்