Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

கொரோனா காலத்தில் பிரபலங்களின் சொர்க்கமாக இருந்த மாலத்தீவு சுற்றுலாவுக்கு தடா!

Advertiesment
கொரோனா காலத்தில் பிரபலங்களின் சொர்க்கமாக இருந்த மாலத்தீவு சுற்றுலாவுக்கு தடா!
, திங்கள், 26 ஏப்ரல் 2021 (13:35 IST)
கொரோனா லாக்டவுனுக்கு பிறகு இந்திய சினிமா நட்சத்திரங்கள் மாலத்தீவுக்கு இன்ப சுற்றுலா சென்று வருவது அதிகமானது.

நடிகைகள் வேதிகா, டாப்ஸி, சமந்தா உள்ளிட்ட நடிகைகள் மாலத்தீவுக்கு சுற்றுலா சென்று அங்கே எடுக்கப்பட்ட கவர்ச்சிகரமான புகைப்படங்களை சமூகவலைதளங்களில் வெளியிட்டு வந்தனர். அதே போல புதிதாக திருமணமான காஜல் அகர்வாலும் தேனிலவுக்கு மாலத்தீவுக்கு சென்றார். நடிகைகள் பொதுவாக சுற்றுலா மற்றும் தேனிலவு என்றால் ஐரோப்பிய நாடுகளுக்கு செல்வதுதான் வழக்கம்.

ஆனால் இப்போது மாலத்தீவுக்கு செல்வது அதிகரித்துள்ளதன் பின்னணியில் ஒரு காரணம் உள்ளது. மாலத்தீவுகளில் சுற்றுலாப் பயணிகளை கவர்வதற்காக புதிய திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதில் ஒன்றுதான் நடிகைகளை இல்வசமாக அந்த தீவுக்கு வரவழைத்து அவர்களுக்கு தங்குமிடம், உணவு உள்ளிட்டவற்றை இலவசமாக அளித்து வருகின்றனர்.

ஆனால் இப்போது இந்தியாவில் கொரோனா பரவல் அதிகமாகியுள்ளதால் நாளை முதல் மாலத்தீவுகளுக்கு இந்திய பிரபலங்கள் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.

 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஆண்களுடன் பப்பில் கூத்தடிக்கும் மீரா மிதுன் - கேடு கெட்ட காதலன்!