நடிகை காஜல் அகர்வால் கடலை பாதுகாக்க வேண்டுமென்றால் கடல் உணவு சாப்பிடுவதை நிறுத்த வேண்டும் எனக் கூறியுள்ளார்.
நடிகை காஜல் அகர்வால் நெட்பிளிக்ஸ் தளத்தில் வெளியான seas piracy படம் பார்த்து ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில் seas piracy இதயத்தை நொறுக்குவதாக இருந்தது. மீன் பிடி நிறுவனங்களுக்கு எந்த கட்டுப்பாடுகளும் இல்லாமல் அதீத சுதந்திரம் அளிக்கப்பட்டுள்ளது. கடலில் நடப்பவற்றை கட்டுப்படுத்த எந்த அரசாங்கமும், சட்டமும் இல்லை. கடலில் அருகிவரும் உயிரினங்களை திருட ஒரு மாபியா கூட்டமே உள்ளது. தேவையான அளவு மட்டுமே மீன்கள் பிடித்தல் என்பது இப்போது இல்லை. கடல்களை பாதுகாப்பதற்கு நாம் கடல் வாழ் உயிரினங்களை சாப்பிடுவதை தவிர வேறு வழியே இல்லை. எல்லா விதமாக ஆலைக் கழிவுகளும் சென்று கலக்கும் கடலில், சுத்தமான மீன்கள் எதுவும் இல்லை. கடல் அழிந்தால் நாமும் அழிவோம் எனக் கூறியுள்ளார்.