Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஷங்கர் அதிருப்தி ; ஷூட்டிங் கேன்சல் ;கமல் அரசியலில் பிசி – இந்தியன் 2 அப்டேட்

ஷங்கர் அதிருப்தி ; ஷூட்டிங் கேன்சல் ;கமல் அரசியலில் பிசி – இந்தியன் 2 அப்டேட்
, புதன், 30 ஜனவரி 2019 (11:29 IST)
இந்தியன் 2 படப்பிடிப்பு தொடங்கிய வேகத்தில் சிலக் காரணங்களால் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

இந்தியன் படத்தின் முதல் பாகம் கடந்த 1996 ஆம் ஆண்டு வெளியாகி பிரம்மாண்டமான வெற்றியைப் பெற்றது. அதையடுத்து 22 ஆண்டுகள் கழித்து இப்போது அதன் இரண்டாம் பாகம் தொடங்கியுள்ளது. கமலின் கடைசிப் படம் என்ற அறிவிப்போடு உருவாகும் இப்படத்தின் மீது பெரிய எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.

இந்தியன் 2 குறித்த அறிவிப்பு வெளியாகி ஒரு ஆண்டுக்கு மேலானாலும்ம் 2.0 பட ரிலீஸ் தாமதம், கமலின் அரசியல் பணிகள் போன்றவற்றால் படப்பிடிப்பு தாமதமாகிக் கொண்டே போனது. கடைசியாக ஒரு வழியாக ஜனவரி 18 அன்று இந்தியன் 2 படப்பிடிப்பு அதிகாரப்பூர்வமாக உருவானது.

ஆனால் ஆரம்பித்து சில நாட்களிலேயே படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக இப்போது செய்திகள் வெளியாக ஆரம்பித்துள்ளன. இதற்குக் காரணம் கமலின் இந்தியன் தாத்தா மேக் அப்பில் ஷங்கர் திருப்தி அடையவில்லையாம். எனவே மேக் அப் விஷயத்தை சரி செய்துவிட்டு மீண்டும் ஷூட்டுங்கை தொடங்கலாம் என அறிவித்துவிட்டாராம்.

கமலும் திடிரென கிடைத்த இந்த எதிர்பாராத விடுமுறையால் மீண்டும் அரசியல் விஷயங்களில் கவனம் செலுத்த ஆரம்பித்துள்ளாராம். ஆனால் அடுத்தக் கட்ட படப்பிடிப்பு எப்போது என்பது படக்குழுவில் யாருக்குமே தெரியாமல் குழப்பத்தில் உள்ளனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இந்தியன்-2 படத்தில் என்னை இப்படி பார்க்கலாம்: காஜல் பேட்டி