Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எக்கச்சக்கமாக எகிறும் கமல் மார்க்கெட்… ஆகஸ்ட்டில் தொடங்குகிறதா இந்தியன் 2?

Webdunia
செவ்வாய், 7 ஜூன் 2022 (15:19 IST)
கமல் ஷங்கர் கூட்டணியின் இந்தியன் 2 திரைப்படம் ஆகஸ்ட் மாதத்தில் தொடங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கமல்ஹாசன் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் ’இந்தியன் 2’ படம் தொடங்கப்பட்டு நான்கு ஆண்டுகளுக்கு மேலாகியும் இன்னும் ரிலீஸாகவில்லை. படப்பிடிப்புத் தளத்தில் நடந்த விபத்துக் காரணமாக மூன்று பேர் உயிரிழந்ததை அடுத்து படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. அதன் பின்னர் இன்னும் தொடங்கப்படவில்லை. படம் சம்மந்தமாக லைகா நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தில் இயக்குனர் ஷங்கருக்கு எதிராக வழக்கு தொடர்ந்தது. அதில் சுமூக முடிவு ஏற்பட்டு விட்ட நிலையில் விரைவில் படப்பிடிப்பு தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் டான் படத்தின் வெற்றி விழாவில் கலந்துகொண்ட நடிகரும், தயாரிப்பாளருமான உதயநிதி ஸ்டாலின் “விரைவில் இந்தியன் 2 திரைப்படத்தைத் தொடங்க உள்ளோம்” எனக் கூறியுள்ளார். இது கமல் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியான செய்தியாக வந்துள்ளது.

இந்நிலையில் விக்ரம் படத்தின் வெற்றிக்குப் பிறகு கமலின் மார்க்கெட் எக்கச்சக்கமாக எகிறிவிட்டதாக சொல்லப்படுகிறது. அதனால் விநியோகஸ்தர்கள் மத்தியிலும் இந்தியன் 2 சம்மந்தமான எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இதனால் ஆகஸ்ட் மாதம் அல்லது செப்டம்பரில் இந்தியன் 2 படப்பிடிப்பு தொடங்க உள்ளதாக சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

ரித்திகா சிங்கின் லேட்டஸ்ட் ஸ்டன்னிங் லுக் போட்டோஷூட் ஆல்பம்!

ஸ்கின் கலர் ட்ரஸ்ஸில் ஜான்வி கபூரின் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

சுதா கொங்கரா & துருவ் விக்ரம் படத்தை தயாரிப்பது யார்? வெளியான தகவல்!

ரி ரிலீஸ் பட்டியலில் இணைந்த சூர்யா & தனுஷின் சூப்பர்ஹிட் படங்கள்!

நயன்தாராவின் மலையாள பட பூஜை புகைப்படங்கள்… இணையத்தில் வைரல்!

அடுத்த கட்டுரையில்
Show comments