Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

லோகேஷுக்கு விலையுயர்ந்த பரிசை அளித்த கமல்… இணையத்தில் வைரலாகும் புகைப்படம்!

லோகேஷுக்கு விலையுயர்ந்த பரிசை அளித்த கமல்… இணையத்தில் வைரலாகும் புகைப்படம்!
, செவ்வாய், 7 ஜூன் 2022 (14:50 IST)
விக்ரம் வெற்றியைத் தொடர்ந்து இயக்குனர் லோகேஷ் கனகராஜுக்கு நடிகர் கமல் கார் ஒன்றை பரிசாக அளித்துள்ளார்.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன், விஜய்சேதுபதி மற்றும் பதக் பாசில் ஆகியோர் நடித்துள்ள படம் விக்ரம், இந்த படத்தில் சூர்யா ஒரு முக்கிய தோற்றத்தில் சில நிமிடங்கள் நடித்துள்ளார். அனிருத் இசையமைத்துள்ளார். ஜூன் 3 ஆம் தேதி இந்த படம் வெளியான நிலையில் ரசிகர்களிடையே நல்ல பாசிட்டிவான விமர்சனங்கள் கிடைத்து வருகிறது. இதுவரை 150 கோடி ரூபாய்க்கும் மேல் உலகளவில் வசூலித்து பிளாக்பஸ்டர் ஹிட்டாகியுள்ளதாக சொல்லப்படுகிறது. கடந்த 2 ஆண்டுகளில் வெளியான தமிழ் திரைப்படங்களின் அனைத்து வசூல் சாதனைகளையும் விக்ரம் முறியடிக்கும் என சொல்லப்படுகிறது.

இந்நிலையில் இந்த வெற்றியை அடுத்து நடிகர் கமல்ஹாசன் தற்போது ‘விக்ரம்’ படத்தின் இயக்குனர் லோகேஷ் கனகராஜுக்கு Lexus கார் ஒன்றை பரிசாக அளித்துள்ளார். இது சம்மந்தமான புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
 
webdunia

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை நடித்த ‘அரபி’… இணையத்தில் கவனம்பெறும் டீசர்!