Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

“இந்தியன் 2 விரைவில் தொடங்குகிறோம்…” சூப்பர் அப்டேட் கொடுத்த உதயநிதி ஸ்டாலின்

“இந்தியன் 2 விரைவில் தொடங்குகிறோம்…” சூப்பர் அப்டேட் கொடுத்த உதயநிதி ஸ்டாலின்
, செவ்வாய், 7 ஜூன் 2022 (08:43 IST)
இந்தியன் 2 திரைப்படம் சில காரணங்களால் கடந்த இரண்டு ஆண்டுகளாக கிடப்பில் உள்ளது.

கமல்ஹாசன் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் ’இந்தியன் 2’ படம் தொடங்கப்பட்டு நான்கு ஆண்டுகளுக்கு மேலாகியும் இன்னும் ரிலீஸாகவில்லை. படப்பிடிப்புத் தளத்தில் நடந்த விபத்துக் காரணமாக மூன்று பேர் உயிரிழந்ததை அடுத்து படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. அதன் பின்னர் இன்னும் தொடங்கப்படவில்லை. படம் சம்மந்தமாக லைகா நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தில் இயக்குனர் ஷங்கருக்கு எதிராக வழக்கு தொடர்ந்தது. அதில் சுமூக முடிவு ஏற்பட்டு விட்ட நிலையில் விரைவில் படப்பிடிப்பு தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் டான் படத்தின் வெற்றி விழாவில் கலந்துகொண்ட நடிகரும், தயாரிப்பாளருமான உதயநிதி ஸ்டாலின் “விரைவில் இந்தியன் 2 திரைப்படத்தைத் தொடங்க உள்ளோம்” எனக் கூறியுள்ளார். இது கமல் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியான செய்தியாக வந்துள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அனிருத்தை திருமணம் செய்ய விரும்புகிறேன் - பிரபல பாடகி