கமல்ஹாசன் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் இந்தியன் 2 படம் தொடங்கப்பட்டு நான்கு ஆண்டுகளுக்கு மேலாகியும் இன்னும் ரிலீஸாகவில்லை. படப்பிடிப்புத் தளத்தில் நடந்த விபத்துக் காரணமாக மூன்று பேர் உயிரிழந்ததை அடுத்து படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. அந்த பிரச்சனைகளை எல்லாம் கடந்து, தற்போது இந்த படத்தை இயக்கி வருகிறார் ஷங்கர். சமீபத்தில், இந்த படத்தின் ஷூட்டிங் தென் ஆப்பிரிக்கா மற்றும் தைவான் ஆகிய நாடுகளில் நடந்தது. இந்நிலையில் தென் ஆப்பிரிக்காவில் 100 ஆண்டுகால பழமையான ரயில் நிலையம் ஒன்றில் முக்கியமானக் காட்சிகளை இயக்குனர் ஷங்கர் படமாக்கியுள்ளாராம். இந்த காட்சிகள் ரசிகர்கள் மத்தியில் பெரியளவில் பேசப்படும் என சொல்லப்படுகிறது.
இந்நிலையில் இப்போது படத்தில் தன் சம்மந்தப்பட்ட காட்சிகளை எடுத்து முடித்தவரை டப்பிங் பேசியுள்ளார் கமல்ஹாசன். அடுத்து படக்குழுவினர் வரிசையாக எடுத்த காட்சிகளுக்கு டப்பிங் பேச உள்ளதாக சொல்லப்படுகிறது. கடைசி கட்ட ஷூட்டிங் விரைவில் சென்னையில் தொடங்க உள்ளதாக சொல்லப்படுகிறது.
இந்நிலையில் இந்தியன் 2 படத்தின் ரிலீஸ் இந்த வருடத்தில் ரிலீஸாக வாய்ப்பில்லையாம். அதனால் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் 14 ஆம் தேதி கோடை விடுமுறைக்கு ரிலீஸாக வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது.