Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஷூட்டிங் ஸ்பாட்டில் மாஸ் காட்டும் "இந்தியன் 2" தாத்தா..!

ஷூட்டிங் ஸ்பாட்டில் மாஸ் காட்டும்
, புதன், 6 பிப்ரவரி 2019 (11:26 IST)
இந்தியன் 2 படத்தின் ஷூட்டிங் ஸ்பாட் பற்றின லேட்டஸ்ட் தகவல் வெளிவந்துள்ளளது. 


 
உலக நாயகன் கமல்ஹாசன் நடிப்பில் கடந்த 22 ஆண்டுகளுக்கு முன்னர் ஷங்கர் இயக்கத்தில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற படம் இந்தியன்.
 
இப்படத்தில் அப்பா, மகன் என இரட்டை வேடத்தில் கமல் நடித்திருந்தார். ஊழலுக்கு எதிராக சுதந்திரப் போராட்ட வீரரான சேனாபதி நடத்தும் போராட்டமே படத்தின் கதைக்களம். தற்போது இப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாகி வருகிறது. முதல் பாகத்தில் நடித்த கமலே இரண்டாம் பாகத்திலும் நாயகனாக நடிக்கிறார். 
 
பிரமாண்ட தயாரிப்பு நிறுவனமான லைக்கா புரோடுக்ஷன் தயாரிக்கும் இப்படத்தில் கமலுக்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடிக்கிறார். ராக்ஸ்டார் அனிருத்  இப்படத்திற்கு இசை அமைக்கிறார். ஒளிப்பதிவாளராக ரவி வர்மன், கலை இயக்குநராக முத்துராஜ், பாடல்களை தாமரை, விவேக் ஆகியோர் எழுதுகின்றனர். 
 
அண்மையில் வெளியான இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரில் கமல்ஹாசனின் சேனாபதி கதாபாத்திரம் வா்மக்கலையுடன் இடம் பெற்று ரசிகர்களை ஈர்த்துள்ளது. 
 
இந்நிலையில் தற்போது கிடைத்துள்ள தகவல் என்னவென்றால், இப்படத்தின் படப்பிடிப்பு பொலிவியா மற்றும் பஹாமாஸ் போன்ற இடங்களில் மார்ச் மாதத்தில் நடக்கவுள்ளதாக நெருங்கிய சினிமா வட்டாரங்கள் மூலம் செய்தி வெளியாகியது.

webdunia


வெளிநாடுகளில் கமலின் வயதான தோற்றத்தில் உள்ள காட்சிகள் படமாக்குகின்றனர். பின்னர் அவர் இந்தியா திரும்புவது போல் காட்சிப்படுத்தபடும் என கூறப்படுகிறது. 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பிரபல சீரியல் நடிகை திடீர் தற்கொலை!