‘இருட்டு அறையில் முரட்டுக்குத்து’ படத்தில் சில வார்த்தைகளை மியூட் செய்திருக்கிறார்கள்.
சந்தோஷ் பி ஜெயக்குமார் இயக்கத்தில் இன்று ரிலீஸாகியுள்ள படம் ‘இருட்டு அறையில் முரட்டுக்குத்து’. ‘ஹர ஹர மஹாதேவஹி’ படத்தைத் தொடர்ந்து அவர் இயக்கியிருக்கும் இரண்டாவது படம் இது. அடல்ட் ஹாரர் காமெடிப் படமான இதில், கெளதம் கார்த்திக், வைபவி ஷாண்டில்யா, சந்திரிகா ரவி, யாஷிகா ஆனந்த் ஆகியோர் நடித்துள்ளனர்.
இந்தப் படத்தின் சென்சார் குறித்து இயக்குநரிடம் கேட்டபோது, “என்னுடைய முதல் படமான ‘ஹர ஹர மஹாதேவஹி’ சென்சாரின்போது நான் ரொம்பவே நெர்வஸாக இருந்தேன். ஏனென்றால், அதுதான் எனக்கு முதல் படம். சென்சார் அதிகாரிகள் எப்படி நடந்து கொள்வார்கள் என எனக்குத் தெரியாது என்பதால் பதட்டமாக இருந்தது.
ஆனால், இந்தப் படத்தின் சென்சாரின்போது நான் நார்மலாகவே இருந்தேன். எப்படியும் சில காட்சிகளை வெட்டச் சொல்வார்கள் அல்லது வசனங்களை மியூட் செய்யச் சொல்வார்கள் என்று நினைத்தேன். அதுபோலவே, சில வார்த்தைகளை மியூட் செய்யச் சொன்னார்கள். ஆனாலும், படம் பார்க்கிறவர்களுக்கு அந்த வார்த்தைகள் என்ன என்பது தெளிவாகவே புரியும்” என்கிறார் சந்தோஷ்.