Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

புதுப்படத்திற்கு பூஜை போட்ட சிவகார்த்திகேயன்

புதுப்படத்திற்கு பூஜை போட்ட சிவகார்த்திகேயன்
, வியாழன், 3 மே 2018 (10:12 IST)
எம்.ராஜேஷ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் புதிய படத்தின் ஷூட்டிங் நேற்று தொடங்கியது. இதில் கோலிவுட்டில் ‘சிவா மனசுல சக்தி, பாஸ் என்கிற  பாஸ்கரன்’ போன்ற வெற்றிப்படங்களை இயக்கியவர் எம்.ராஜேஷ். இவரது இயக்கத்தில் கடைசியாக வெளியான படம் ‘கடவுள் இருக்கான் குமாரு’.  இதனையடுத்து ராஜேஷ் இயக்கும் புதிய படத்தில் ஹீரோவாக சிவகார்த்திகேயன் நடிக்கவிருக்கிறார்.
ஏற்கெனவே, சிவகார்த்திகேயனின் ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ படத்திற்கு இயக்குநர் எம்.ராஜேஷ் வசனம் எழுதியிருந்தார். இன்னும் பெயரிடப்படாத  இப்படத்தை ‘ஸ்டுடியோ கிரீன்’ நிறுவனம் சார்பில் கே.ஈ.ஞானவேல்ராஜா தயாரிக்கவுள்ளார். இதற்கு பாலசுப்ரமணியெம் ஒளிப்பதிவு செய்யவுள்ளார். இதில்  சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ‘லேடி சூப்பர் ஸ்டார்’ நயன்தாரா டூயட் பாடி ஆடவுள்ளதாக கூறப்படுகிறது.
webdunia
இது குறித்து அதிகாரபூர்வமான தகவல் இன்னும் வெளியாகாத நிலையில், இந்தப் படத்தின் உரிமையை சன் தொலைக்காட்சி மிகப்பெரிய தொகை கொடுத்து வாங்கியிருப்பதாக கூறப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கழுத்தில் மலைப்பாம்புடன் தமிழ் நடிகை(வைரலாகும் வீடியோ)