Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எலக்‌ஷனில் ஜெயித்து சங்கத்துக்கு தலைவரான ராதாரவி

Webdunia
திங்கள், 5 மார்ச் 2018 (11:11 IST)
தமிழ் சினிமா டப்பிங் சங்கத்துக்குத் தலைவராக ஆகியிருக்கிறார் நடிகர் ராதாரவி. 
தமிழ் சினிமா டப்பிங் சங்கத்துக்கு, கடந்த சனிக்கிழமை தேர்தல் நடைபெற்றது. ஓய்வுபெற்ற நீதிபதி கவிதா தலைமையில் நடைபெற்ற இந்த தேர்தலில், நடிகர் ராதாரவி தலைமையில் ஒரு அணியும், ரத்னகுமார் தலைமையில் ஒரு அணியும் போட்டியிட்டன.
 
இதில், ராதாரவி சங்கத்தின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். செயலாளராக கதிரவனும், பொருளாளராக ராஜ்கிருஷ்ணனும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். துணைத்  தலைவர்களாக கே.ஆர்.செல்வராஜ், வீரமணி மற்றும் ரோகிணி தேர்ந்தெடுக்கப்பட்டனர். ராஜேந்திரன், ஸ்ரீஜா ரவி, சீனிவாசமூர்த்தி ஆகியோர் இணை செயலாளர்களாகத் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
 
நடிகர் ராதாரவி, தென்னிந்திய நடிகர் சங்கத்தின் முன்னாள் செயலாளராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

சின்னத்திரை நடிகர் சங்கத் தேர்தல்: ரவீனாவின் வேட்புமனு நிராகரிப்பு!

தீபாவளி ரிலீஸ் போட்டியில் இணைந்த பிரதீப் ரங்கநாதன் படம்.. அதிகாரபூர்வ அறிவிப்பு..!

ALTT, ULLU உள்ளிட்ட 24 ஆபாச OTT தளங்களுக்கு தடை! - மத்திய அரசு அதிரடி!

கிளாமர் உடையில் ரகுல் ப்ரீத் சிங்கின் கார்ஜியஸ் புகைபடத் தொகுப்பு!

வித்தியாசமான உடையில் க்யூட் போஸ் கொடுத்த ஐஸ்வர்யா ராஜேஷ்!

அடுத்த கட்டுரையில்
Show comments