Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஸ்ரீதேவி மறைவுக்கு பிரபல தலைவர்கள் இரங்கல்

Advertiesment
Sridevi death | Sridevi | Political Leaders Condemn | cinema news
, ஞாயிறு, 25 பிப்ரவரி 2018 (10:50 IST)
பிரபல நடிகை ஸ்ரீதேவியின் மறைவு இன்று இந்திய திரையுலக ரசிகர்களுக்கு ஒரு பேரதிர்ச்சி தரும் செய்தியாக உள்ளது. திரைத்துறையில் குழந்தை நட்சத்திரம் முதல் ஐம்பது ஆண்டுகள் கொடிகட்ட ஸ்ரீதேவியின் வாழ்க்கை 54 வயதிலேயே முடிவுற்றது அனைவருக்கும் தாங்க முடியாத வருத்தம் தரும் செய்தியாக உள்ளது. ஸ்ரீதேவியின் மறைவுக்கு திரையுலகினர் மட்டுமின்றி அரசியல் தலைவர்களும் தங்களது டுவிட்டரில் இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் ஜனாதிபதி, பிரதமர், காங்கிரஸ் கட்சி தலைவர், மற்றும் துணை முதல்வர் ஆகியோர்களது டுவீட்டுக்களை தற்போது பார்ப்போம்

ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்: மூன்றாம் பிறை உள்ளிட்ட படங்கள் மூலம் நடிகா்களுக்கு முன்னுதாரணமாக திழ்ந்த ஸ்ரீதேவியின் மறைவு கேட்டு மிகவும் அதிர்ச்சியடைந்தேன். அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்

பிரதமா் மோடி: நடிகை ஸ்ரீதேவியின் மறைவு மிகப்பெரிய சோகத்தை அளிக்கினறது. இந்திய சினிமா துறையின் ஜாம்பவானாக திகழ்ந்தவா் ஸ்ரீதேவி. அவரது நடிப்பில் பல்வேறு நீங்காத நினைவுகள் தருகின்றன. அவரது ஆத்மா சாந்தியடைய வேண்டுகிறேன்

காங்கிரஸ் கட்சி தலைவா் ராகுல்காந்தி: ஸ்ரீதேவியின் மறைவு எனக்கு திடீா் அதிர்ச்சியளிக்கிறது. மிகப்பெரிய திறமைசாலியும் பன்முகத்தன்மையும் கொண்ட ஸ்ரீதேவியின் நடிப்பு மொழி மற்றும் தலைமுறைகளை தாண்டியது

துணைமுதல்வர் ஓபிஎஸ்:  மிகச்சிறந்த நடிகையான ஸ்ரீதேவியின் திடீர் மறைவு துரதிஷ்டவசமானது. ஸ்ரீதேவியின் திரையுலக வாழ்க்கை தலைமுறைகள் கடந்தது அனைவரையும் ஈர்த்துள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நடிகை ஸ்ரீதேவி மறைவிற்கு பிரதமர் மோடி இரங்கல்