Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இப்படிப்பட்ட புனிதர்கள் வாழ்ந்த பூமியில்- கற்பழிப்பு, கொலை – பிரபல நடிகர் வேதனை !

Webdunia
வியாழன், 1 அக்டோபர் 2020 (16:27 IST)
உத்தரப் பிரதேச மாநிலத்திலுள்ள ஹத்ராஸ் என்ற பகுதியில் இளம் பெண் ஒருவர் கூட்டு பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அந்த இளம்பெண் 15 நாட்களாக மருத்துவ சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று காலமானார். அவரது மறைவு உத்தரபிரதேச மாநிலத்தை மட்டுமின்றி நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதற்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு  கிளம்பியுள்ளது. சென்னை உயர் நீதிமன்றம் புனிதர்கள் வாழ்ந்த பூமி வன்கொடுமை பூமியாக மாறி வருவதாக வேதனை தெரிவித்திருந்தது.

இந்நிலையில், பிரபல நடிகர் விவேக் தனது டுவிட்டர் பக்கத்தில் இந்தச் சம்பவம் குறித்து ஒரு பதிவிட்டுள்ளார்.

அதில், அன்பே சிவம்- திருமூலர்; அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ்?- திருவள்ளுவர்; ஜீவகாருண்யமே மோட்சத் திறவுகோல்-வள்ளலார் எல்லாவற்றுக்கும் மேல் அன்பு- விவேகானந்தர். இப்படிப்பட்ட புனிதர்கள் வாழ்ந்த பூமியில்- கற்பழிப்பு, கொலை. என்று வேதனை தெரிவித்துள்ளார்.


 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

அந்த ரெண்டு படங்களோட கதையை மிக்ஸ் பண்ணா வீர தீரன் சூரன்.. அட விக்ரமே சொல்லிட்டாரே!

அண்ணன பாத்தியா.. அப்பாட்ட கேட்டியா? தமிழ் பாட்டு மாறியே இருக்கே! வைரலாகும் தாய்லாந்து பாடலின் பின்னணி!

உடலை தானம் செய்வதாக அறிவித்த கராத்தே மாஸ்டர் ஷிகான் ஹூசைனி!

டிராகன் இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் நடிக்கிறாரா தனுஷ்?

இளையராஜாவுக்கு பாரத ரத்னா விருது அறிவிக்கப்பட உள்ளதா?

அடுத்த கட்டுரையில்