Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஹத்ராஸ் இளம்பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்படவில்லை- ஏடிஜிபி தகவல்

Advertiesment
ஹத்ராஸ் இளம்பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்படவில்லை- ஏடிஜிபி தகவல்
, வியாழன், 1 அக்டோபர் 2020 (16:22 IST)
ஹத்ராஸ் இளம்பெண்  பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு படுகொலை செய்யப்படவில்லை என்று உ.பி. சட்டம் ஒழுங்கு ஏடிஜிபி பிரஷாந்த் குமார் தகவல் தெரிவித்துள்ளார்.

 
உத்தரப் பிரதேச மாநிலத்திலுள்ள ஹத்ராஸ் என்ற பகுதியில் இளம் பெண் ஒருவர் கூட்டு பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அந்த இளம்பெண் 15 நாட்களாக மருத்துவ சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று காலமானார். அவரது மறைவு உத்தரபிரதேச மாநிலத்தை மட்டுமின்றி நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது

இளம்பெண்ணின் மரணத்திற்கு காரணமான குற்றவாளிகளை சட்டப்படி கடுமையாக தண்டிக்க பிரதமர் மோடி, உபி முதல்வருக்கு உத்தரவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் வழக்கம் போல் இந்த இளம்பெண்ணின் மரணமும் அரசியலாக்கப்பட்டு பல அரசியல் கட்சி தலைவர்கள் அந்த இளம்பெண்ணின் குடும்பத்தினரை சந்தித்து அரசியல் செய்து வருவதாக குற்றம் சாட்டப்பட்டு வருகிறது

இந்நிலையில் ஹத்ராஸில் பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட பெண்ணிற்கு நியாயம் கிடைக்குவேண்டி 2,3 தினங்கள் ஆனாலும் அங்கு நடந்து செல்வதாக நொய்டாவிலிருந்து செல்லும் ராகுல் காந்தியும் பிரியாகாந்தியும் கூறினர்.

இந்நிலையில்,தடையை மீறி சென்றதாக ராகுல்காந்தியை போலீஸார் கைது செய்தனர். மேலும் தன்னைத் தள்ளிவிட்டு லத்தியால் தாக்கியதாகவும் ராகுல் புகார் தெரிவித்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ராகுலை கீழே தள்ளவில்லை, கீழே விழுந்தார்: அரசியலாகிறதா ஹத்ரஸ் விவகாரம்?