Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ரஜினியின் அண்ணாத்த பட முக்கிய அப்டேட்....

ரஜினியின் அண்ணாத்த பட முக்கிய அப்டேட்....
, திங்கள், 15 மார்ச் 2021 (21:59 IST)
சூப்பர் ஸ்டார் ரஜினியின் அண்ணாத்த படம் குறித்த முக்கிய அப்டேட் வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரம் ரஜினிகாந்த். இவரது நடிப்பில் உருவாகிவரும் அண்ணாத்த படத்திற்கு ஏகப்பட்ட எதிர்பார்ப்பு கூடியுள்ளது.

சிறுத்தை சிவாஇயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்துவரும் படம் அண்ணாத்த. இப்படத்தில் அவருக்கு ஜோடியாக நயன்தாரா  நடிக்கிறார். மேலும், குஷ்பு, கீர்த்தி சுரேஷ், மீனா உள்ளிட்ட நட்சத்திரப்பட்டாளமே நடிக்கிறார்கள்.

சமீபத்தில், ஹைதராபாத் ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் நடைபெற்ற அண்ணாத்த படப்பிடிப்பில் 4 பேருக்கு கொரோனா தொற்று காரணமாக படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டது.

ரஜினிகாந்த் உடல்நலக்குறைவு காரணமாக சென்னையிலுள்ள தனது வீட்டில் ஓய்வெடுத்து வந்த நிலையில் மீண்டும் அண்ணாத்த படப்பிடிப்புஇன்று முதல் ( மார்ச் 15 ஆம் தேதி )சென்னையில்  தொடங்கியுள்ளது.

இதனால் ரஜினி ரசிகர்கள் தலைவர் தேர்தலில் களமிறங்கவில்லை என்றாலும் படத்தில் நடிப்பது மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

’விக்ரம் 60’ படத்தில் இணைந்துள்ள முன்னணி நடிகை !