Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
Tuesday, 1 April 2025
webdunia

ராஜமௌலியின் RRR படத்தின் ஷூட்டிங்… எப்படி நடக்கும்? வீடியோ வெளியீடு

Advertiesment
நடிகர் அஜய் தேவ்கான்
, செவ்வாய், 6 அக்டோபர் 2020 (17:05 IST)
இரு பெரும் நடிகர்களை இணைத்து வைத்து படம் இயக்கி வரும் இந்தியாவின்ப் பிரமாண்ட இயக்குனர் ராஜமௌலி தனது RRR பட ஷூட்டி எப்படி நடக்கும் என்பது குறித்து ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார்.

தென்னிந்தியாவின் பிரம்மாண்ட இயக்குனராக உருவாகியுள்ள ராஜமௌலி பாகுபலி படத்துக்குப் பிறகு ராம் சரண் மற்றும் ஜூனியர் என் டி ஆர் ஆகியோரை வைத்து ஆர் ஆர் ஆர் என்ற வரலாற்றுப் படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் கதாநாயகியாக ஆலியா பட் மற்றும் ஹாலிவுட் நடிகை ஒருவர் நடித்து வருகின்றனர். இந்த படத்தின் ஒரு முக்கியமானக் கதாபாத்திரத்தில் நடிக்க நடிகர் அஜய் தேவ்கான் சம்மதித்துள்ளார். இந்த படத்தின் மோஷன் போஸ்டர் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றது.

மிகப்பெரிய எதிர்பார்ப்போடு உருவாகி வரும் இந்த படத்தில் இரு பெரும் நடிகர்களான ஜூனியர் என் டி ஆர் மற்றும் ராம்சரண் ஆகியோரை நடிக்க வைத்துள்ளது குறித்து பேசியுள்ள ராஜமௌலி ‘ நான் சிறு வயதில் காமிக்ஸ் படிப்பேன். அதில் சூப்பர்மேனும் ஸ்பைடர் மேனும் சேர்ந்தால் எப்படி இருக்கும்: அனுமனும் பீமனும் சேர்ந்தால் எப்படி இருக்கும் என்றெல்லாம் யோசிப்பேன். ராம்சரண் மற்றும் ஜூனியர் என்.டி.ஆர் இருவருமே தொழில்ரீதியாக எதிரெதிர் குடும்பங்களைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் இருவருமே நல்ல நண்பர்கள். அவர்கள் இருவரையும் இயக்குவது சுமையாக இல்லை. எனர்ஜி பூஸ்டராகதான் உள்ளது.’ எனக் கூறியிருந்தார்.

இந்நிலையில் கொரொனாவால் 200 நாட்களுக்கும் மேலாக முடங்கியிருந்த ’ஆர் ஆர் ஆர் ’ஷூட்டிங் தற்போது மீண்டும் தொடங்கவுள்ளதாக இயக்குநர் ராஹமௌலி தெரிவித்துள்ளார்.

இந்த படத்தின் ஷூட்டிங் எப்படி பாதுகாப்பு வழிமுறைகளுடனும் அரசு அறிவித்துள்ள வழிகாட்டு நெறிமுறைகளுடன் நடக்கும் என்பது குறித்து இந்த வீடியோவில் பதிவாகியுள்ளது. தற்போது இது வைரலாகி வருகிறது.


Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஜெயம் ரவியின் பூமி ஓடிடி ரிலிஸ்… விநியோகஸ்தர்களால் மிகப்பெரிய சிக்கல்!