அண்மையில் நடிகை இலியானா கர்ப்பமாக உள்ளதாக செய்திகள் பரவியது. இந்த செய்திக்கு தற்போது அவர் முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
மும்பையைச் சேர்ந்த பாலிவுட் நடிகையான இலியானா டி க்ரூஸ், தெலுங்குப் படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர். தமிழில் ‘கேடி’ மற்றும் ‘நண்பன்’ படங்களில் நடித்துள்ள இலியானா, தற்போது பாலிவுட்டில் முழுநேர நடிகையாக உள்ளார்.
இலியானாவும், வெளிநாட்டு புகைப்படக் கலைஞரான ஆண்ட்ரூ நீபான் என்பவரும் நீண்ட காலமாக காதலித்து வருவதாகக் கூறப்பட்டது. அந்நிலையில், அவரைத் தன் கணவர் எனக் குறிப்பிட்டு ட்விட்டரில் ஒரு பதிவை வெளிட்டுள்ளார் இலியானா. ஆனால், இருவரும் கல்யாணம் செய்து கொண்டதிற்கான எந்த அதிகாரபூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை. அந்நிலையில், இலியானா கர்ப்பமாக உள்ளதாக தகவல் வெளிவந்தது. அதற்கேற்ப அவரது உடல் எடையும் அதிகரித்திருந்த புகைப்படங்கள் வெளியானது.
இந்நிலையில், இலியானா நான் கார்ப்பமாக இல்லை என்றும், உடல் எடை அதிகரித்திருப்பது தனக்கு பிடித்துள்ளது என்றும் தெரிவித்தார்.