Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

“எனக்கு கெட்ட பேரு வாங்கி தர பாக்குறீங்களா?” பாக்கியராஜ் படத்தை மறுத்த இளையராஜா! கங்கை அமரன்தான் காரணம்??

Advertiesment
Illaiyaraja

Raj Kumar

, புதன், 22 மே 2024 (10:24 IST)
இசைஞானி இளையரஜாவும் கங்கை அமரனும் ஒன்றாகவே சினிமாவில் பயணித்தவர்கள் என்பதால் அவர்கள் பல பிரச்சனைகளையும் சினிமா வாழ்க்கையில் சந்தித்துள்ளனர். அதை ஒரு நேர்க்காணலில் பகிர்ந்துள்ளார் கங்கை அமரன்.



கங்கை அமரனும் இளையராஜாவும் ஒன்றாகத்தான் கிராமத்தில் இருந்து வாய்ப்பு தேடி சென்னைக்கு வந்தனர். இளையராஜா வாய்ப்பு கிடைத்து இசையமைப்பாளர் ஆன பிறகு கங்கை அமரனுக்கும் கூட இசையமைப்பதற்கான வாய்ப்புகள் கிடைக்க துவங்கின.

இந்த நிலையில் இயக்குனர் பாக்கியராஜ் தமிழ் சினிமாவிற்கு இயக்குனராக அறிமுகமானபோது அவரது திரைப்படங்களுக்கு தொடர்ந்து கங்கை அமரன்தான் இசையமைத்து வந்தார். பாக்கியராஜ் இயக்கிய முதல் படமான சுவரில்லா சித்திரங்கள் படத்தில் இருந்தே கங்கை அமரன்தான் அவருக்கு அதிக படங்களுக்கு இசையமைத்து கொடுத்தார்.


பாக்கியராஜ் இயக்கத்தில் முந்தானை முடிச்சி திரைப்படம் தயாரானப்போது அதில் சில பிரச்சனைகள் முளைத்தன. முதலில் இந்த திரைப்படத்திற்கு கங்கை அமரன்தான் இசையமைப்பதாக இருந்தது. கங்கை அமரனே இசையமைப்பதாக கூறி போஸ்டர்கள் வரை செய்திதாள்களில் வெளியாகின.

ஆனால் படத்தை தயாரிக்கும் ஏ.வி.எம் நிறுவனம் இந்த படத்திற்கு இளையராஜாதான் இசையமைக்க வேண்டும் என கூறிவிட்டனர்.  இதற்கு கங்கை அமரன் எந்த ஒரு ஆட்சேபனையும் தெரிவிக்கவில்லை என்றாலும் எனது தம்பியின் வாய்ப்பை நான் பெற்றுக்கொண்டதாக ஊர் தப்பாக பேசும் என கூறி இளையராஜா அந்த படத்திற்கு இசையமைக்க மறுத்துவிட்டார்.

பிறகு கங்கை அமரன்தான் இளையராஜாவை சமாதானப்படுத்தி அந்த படத்தில் இசையமைக்க வைத்துள்ளார். இந்த நிகழ்வை அவர் நேர்க்காணலில் பகிர்ந்திருந்தார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சூரி செய்திருப்பது கடினமான விஷயம்… அவருக்கு இயற்கை உதவி செய்யட்டும்- விஜய் சேதுபதி வாழ்த்து!