கந்தர்வ லோகத்தில் பாடுவதற்காக போய்விட்டாயா?
பிரபல பின்னணி பாடகர் எஸ்பி பாலசுப்பிரமணியம் அவர்கள் இன்று பிற்பகல் காலமான நிலையில் அவருடைய மறைவு குறித்து இரங்கல் தெரிவிக்காத பிரபலங்களே இல்லை என்று கூறலாம்
இந்த நிலையில் சற்று முன்னர் இசைஞானி இளையராஜா அவர்கள் எஸ்பிபி மறைவு குறித்து உருக்கமாக வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் அவர் கூறியிருப்பதாவது:
பாலு, சீக்கிரம் எழுந்து வா, உன்னை பார்க்க நான் காத்திருக்கிறேன் என்று சொன்னேன். ஆனால் நீ போய் விட்டாய். எங்கே போனாய்? கந்தர்வ லோகத்தில் பாடுவதற்காக போய்விட்டாயா?
இங்கே உலகம் ஒரு சூனியமாகி விட்டது. உலகத்தின் ஒன்றும் எனக்கு தெரியவில்லை. பேசுவதற்கு பேச்சு வரவில்லை, சொல்வதற்கு வார்த்தை வரவில்லை, என்ன சொல்வது என்று எனக்குத் தெரியவில்லை. எல்லா துக்கத்திற்கும் ஒரு அளவு இருக்கு, ஆனா இதுக்கு அளவே இல்லை’