Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நானே உங்கள் வீட்டுக்கு வருகிறேன்: இளையராஜாவின் பிறந்த நாள் செய்தி

Webdunia
செவ்வாய், 2 ஜூன் 2020 (19:06 IST)
இசைஞானி இளையராஜா இன்று தனது பிறந்தநாளை கொண்டாடி வரும் நிலையில் ரசிகர்களாகிய உங்கள் வீட்டிற்கு நானே நேரில் வருகிறேன் என்று கூறி இருப்பது அனைவருக்கும் இன்ப அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது 
 
இன்று இளையராஜா பிறந்தநாளை அடுத்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் அவர் கூறியதாவது: எனக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறிய அனைவருக்கும் நன்றி. நான் உங்களை சந்திக்க விடாமல் கொரோனா காலகட்டம் தடுக்கின்றது. இருந்தாலும் நானே உங்களை நேரில் வந்து உங்கள் வீட்டிலேயே சந்திக்கப் போகிறேன். ஆம், இசை ஓடிடி என்ற ஒன்றை நான் ஆரம்பிக்கிறேன். இந்த இசை ஓடிடியில் நான் எனது இசை அனுபவங்களையும் பாடல்கள் கம்போஸ் செய்த போது ஏற்பட்ட சில சுவாரஸ்மான சம்பவங்களையும், பாடலை கம்போஸ் செய்யும் போது நாங்கள் உழைத்த உழைப்பு குறித்தும் விரிவாக கூற இருக்கிறேன் 
 
மேலும் என்னை பற்றி பல இசை மேதைகள் குறிப்பிட்ட சில பேட்டிகளும் அந்த இசையை ஓடிடியில் ஒளிபரப்பாக உள்ளது. வேறு எந்த சேனல்களிலும் கேட்க முடியாத இந்த தகவல்களை நீங்கள் கேட்டும் பார்த்தும் மகிழலாம். இந்த இசை ஓடிடி விரைவில் உருவாக இருக்கிறது அதற்காக காத்திருங்கள் காத்திருந்ததாலும் வீண் போகாது என்று இசைஞானி இளையராஜா அந்த வீடியோவில் கூறியுள்ளார்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கீர்த்தி சுரேஷின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் புகைப்பட தொகுப்பு!

கிளாமர் க்யூன் யாஷிகா ஆனந்தின் லேட்டஸ்ட் கண்கவர் போட்டோஷூட் ஆல்பம்!

கார்த்தி நடிக்கும் மார்ஷல்.. சாய் அப்யங்கர் இசை – முதல் பார்வை போஸ்டர் வெளியீடு!

கேன்சர் இருப்பது தெரிந்தும் அவரை திருமணம் செய்துகொண்டேன்… விவாகரத்துக் குறித்து மனம் திறந்த விஷ்ணுவிஷால்!

96 படத்தின் கதையை நான் தமிழ் சினிமாவில் எடுக்க எழுதவேயில்லை… இயக்குனர் பிரேம்குமார் பகிர்வு!

அடுத்த கட்டுரையில்
Show comments