Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஊரடங்கில் நேரத்தில் ரஜினி வீட்டில் நடந்த கொண்டாட்டம்! ரசிகர்கள் வாழ்த்து

Advertiesment
ஊரடங்கில் நேரத்தில் ரஜினி வீட்டில் நடந்த கொண்டாட்டம்! ரசிகர்கள் வாழ்த்து
, புதன், 6 மே 2020 (19:05 IST)
ஊரடங்கில் நேரத்தில் ரஜினி வீட்டில் நடந்த கொண்டாட்டம்
ஊரடங்கு நேரத்தில் இந்தியா உள்பட அனைத்து நாடுகளிலும் அனைத்து கொண்டாட்டங்களும் நிறுத்தப்பட்டுள்ள நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வீட்டில் நடந்த கொண்டாட்டம் குறித்த தகவல் தற்போது வெளிவந்துள்ளது 
 
சூப்பர் ஸ்டார் ரஜினியின் மகளும் கோச்சடையான், விஐபி 2 ஆகிய படங்களை இயக்கியவருமான சௌந்தர்யா ரஜினியின் மகனுக்கு இன்று 5வது பிறந்தநாள் கொண்டாடப்பட்டது. அஸ்வின் என்ற தொழிலதிபரை திருமணம் செய்த சௌந்தர்யாவுக்கு வேத் என்ற மகன் உள்ளார் இந்த நிலையில் அஸ்வினை விவாகரத்து செய்துவிட்டு கடந்த ஆண்டு விசாகன் என்ற நடிகரை சௌந்தர்யா திருமணம் செய்து கொண்டார் 
 
இந்த நிலையில்தான் இன்று விசாகன் மற்றும் சௌந்தர்யா ஆகிய இருவரும் இணைந்து வேத் ஐந்தாவது பிறந்தநாளை சிறப்பாக கொண்டாடினர்கள். இதுகுறித்து தனது டுவிட்டரில் சௌந்தர்யா புகைப்படத்துடன் கூடிய ஒரு பதிவை பதிவு செய்துள்ளார் வேத்தை விசாகன் தூக்கி வைத்துக்கொண்டு இருக்கும் நிலையில் வேத் கேக் வெட்டும் காட்சி அந்த புகைப்படத்தில் உள்ளது 
தனது மகன் ஐந்தாவது பிறந்தநாளை எட்டி உள்ளான் என்றும் கடவுள் அவனுக்கு ஆசிர்வதிப்பார் என்றும் எங்கள் தேவதை வேத் பாப்பா என்றும் சௌந்தர்யா அந்த டுவிட்டரில் குறிப்பிட்டுள்ளார். குட்டித்தலைவர் வேத்துக்கு சமூக வலைத்தளங்களில் ரஜினி ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.


Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

எனக்கு இந்த இரண்டை தவிர வேறு எதுவும் தெரியாது: நடிகர் செந்தில்