Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

இசைஞானி பிறந்தநாள்: அசத்தல் போஸ்டரை வெளியிட்ட ‘இளையராஜா’ படக்குழு!

Advertiesment
Ilaiyaraja

Prasanth Karthick

, ஞாயிறு, 2 ஜூன் 2024 (12:31 IST)
இசைஞானி இளையராஜா பிறந்தநாளை முன்னிட்டு தனுஷ் நடிக்கும் ‘இளையராஜா’ படத்தின் புதிய போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது.



தமிழ் சினிமாவில் பல தசாப்தங்களாக 1000க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்துள்ளவர் இசைஞானி இளையராஜா. தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி என பல மொழிகளிலும் இசையமைத்துள்ள இளையராஜாவுக்கு அனைத்து மொழிகளிலும் ர்சிகர்கள் உள்ளனர்.

இந்நிலையில் இசைஞானி இளையராஜாவின் வாழ்க்கை வரலாறு விரைவில் படமாக இருக்கிறது. நடிகர் தனுஷ் இளையராஜாவாக நடிக்கும் இந்த படத்தை ராக்கி, கேப்டன் மில்லர் படங்களை இயக்கிய அருண் மாதேஸ்வரன் இயக்குகிறார். இளையராஜாவே இந்த படத்திற்கு இசையமைக்கிறார்.

இன்று இளையராஜாவின் பிறந்தநாள். ஆனால் சமீபத்தில் இளையராஜாவின் மகள் பவதாரிணி மறைந்ததால் இந்த பிறந்தநாளை அவர் கொண்டாடவில்லை என கூறிக் கொள்ளப்படுகிறது. இருந்தாலும் இசை ரசிகர்கள் அவர் பிறந்தநாளை கொண்டாட தயாராகி வருகின்றனர். இந்நிலையில் இசைஞானியின் பிறந்தநாளை முன்னிட்டு ‘இளையராஜா’ படக்குழு புதிய போஸ்டர் ஒன்றை இன்று வெளியிட்டுள்ளனர். இது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.



Edit by Prasanth.K

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மகள் பவதாரணி மரணம்..! தனது பிறந்தநாளை புறக்கணித்த இளையராஜா..!!