Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

வெற்றிகள் தொடர்ந்து குவியட்டும் ச-கோ-த-ர-ரே- கமலை பாராட்டிய இளையராஜா

Advertiesment
வெற்றிகள் தொடர்ந்து குவியட்டும் ச-கோ-த-ர-ரே- கமலை பாராட்டிய இளையராஜா
, புதன், 22 ஜூன் 2022 (17:44 IST)
தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர் லோகேஷ் கனகராஜ். இவர் மாநகரம், கைதி, மாஸ்டர் ஆகிய படங்களை இயக்கியதை அடுத்து,  நடிகர் கமல், பகத்பாசி, விஜய்சேதுபதி மற்றும் சூர்யா ஆகியோர் நடிப்பில் இயக்கிய படம்  விக்ரம். இப்படம் ஜூன் 3 ஆம் தேதி ரிலீஸாகி  உலகம் முழுவதும் மிகப்பெரிய வசூல் சாதனை படைத்துள்ளது.

இப்போதும் வெளி நாடுகள் மற்றும் இந்தியாவில் அரங்குகள் நிறைந்த காட்சிகளாக ஓடிக்கொண்டிருக்கிறது விக்ரம் படம்.

சமீபத்தில், இப்படத்தில் பணியாற்றிய துணை இயக்குனர்கள் பைக்குகள் வாங்கிக் கொடுத்த கமல்ஹாசன், இயக்குனர் லோகேஷுக்கு சொகுகார் வாங்கிக் கொடுத்தார். சூர்யாவுக்கு ரோலக்ஸ் வாட்ச் வாங்கிக்கொடுத்தார். இந்த நிலையில், நேற்று இப்படக்குழுவினருக்கு கமல் சார்பில் விருந்து வைக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து தமிழ் சினிமா வரலாற்றி அனைத்து பாக்ஸ் ஆபீஸ் வசூல் சாதனைகளையும் முறியடித்துள்ள விக்ரம் படத்தின் வெற்றிக்கு நடிகர் கமலை, இளையராஜா பாராட்டியுள்ளார்.
webdunia

அதில், வெற்றிகள் தொடர்ந்து குவியட்டும் ச-கோ-த-ர-ரே!!!

@ikamalhaasan மட்டற்ற மகிழ்சசியாக இருக்கிறது அதோடு உங்கள் மலர்ந்த முகம் காணக்காண சந்தோஷமாக இருக்கிறது.

விக்ர மாமுகம் தெரியுதே -அது வெற்றிப் புன்னகை புரியுதே! என மாற்றிக்கொள்ளலாம் எனத் தெரிவித்துள்ளார்.


Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கையில வெப்பனே இல்லாட்டியும் மாஸ்ண்ணா நீங்க..! – வாரிசு மூன்றாவது போஸ்டர்!