Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

இசைஞானி இளையராஜா நீதிமன்றத்தில் ஆஜர்? என்ன வழக்கு?

Advertiesment
ilaiyaraja

Mahendran

, வியாழன், 13 பிப்ரவரி 2025 (13:10 IST)
இசைஞானி இளையராஜா சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று ஆஜரான நிலையில், இது குறித்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
 
பாடல்கள் உரிமம் குறித்த வழக்கில் இன்று சென்னை உயர் நீதிமன்றத்தில் இசைஞானி இளையராஜா ஆஜராகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.
 
கடந்த 2010ஆம் ஆண்டு, தாங்கள் உரிமம் பெற்ற பாடல்களை YouTube போன்ற சமூக ஊடகங்களில் வெளியிடுவதை தடை செய்ய வேண்டும் என்று "மியூசிக் மாஸ்டர்" என்ற நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.
 
இந்த வழக்கில் தேவர் மகன், குணா உள்பட 109 படங்களின் உரிமை பெற்றுள்ளதாகவும், இளையராஜா மனைவி பெயரில் உள்ள நிறுவனத்துடன் ஒப்பந்தம் போடப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பாடல்களை YouTube சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருவதால், அதை தடை செய்ய வேண்டும் என்றும் கோரப்பட்டுள்ளது.
 
இந்த வழக்கில் எதிர்மனுதாரராக இசைஞானி இளையராஜா சேர்க்கப்பட்ட நிலையில், இன்று அவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி சாட்சியம் அளித்தார். அவரிடம் குறுக்கு விசாரணை இன்று நடைபெறும் என்றும் கூறப்படுகிறது. இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 
Edited by Mahendran

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சிறு பிள்ளைத் தனமாக நடந்துகொண்ட இயக்குனர் சீனு ராமசாமி… ரசிகர்கள் காட்டம்!