Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
Monday, 7 April 2025
webdunia

மதம் மாறப்போறன்னு சொன்னதும் என் அப்பா சொன்னது இதுதான்… மனம் திறந்த யுவன்!

Advertiesment
யுவன் ஷங்ஜர் ராஜா

vinoth

, திங்கள், 14 அக்டோபர் 2024 (09:02 IST)
தமிழ் சினிமாவில் கடந்த 25 ஆண்டுக்கும் மேலாக முன்னணி இசையமைப்பாளராக இயங்கி வருபவர் யுவன் ஷங்கர் ராஜா. அவர் இசையமைத்த பல பாடல்கள் இன்றளவும் இளைஞர்களால் கொண்டாடப்பட்டு வருகின்றன. ஆனால் சமீபகாலமாக அவரிடம் இருந்து நல்ல பாடல்கள் அதிகமாக  வரவில்லை. முன்னணி நடிகர்களின் படங்களுக்கு இசையமைத்தும் அவரால் தன்னுடைய பழைய பாடல்களுக்கு ஈடாக பாடல்கள் கொடுக்க முடியவில்லை என்ற விமர்சனம் எழுந்துள்ளது.

சமீபத்தில் அவர் இசையமைத்த கோட் படத்தின் பாடல்களும் இந்த விமர்சனத்தில் இருந்து தப்பவில்லை. இந்நிலையில் யுவன் சமீபத்தில் அளித்த ஒரு நேர்காணலில் தன்னுடைய குடும்ப விஷயங்கள் பற்றி மனம் திறந்து பேசியுள்ளார். அதில் தான் இஸ்லாமிய மதத்துக்கு மாறியது பற்றியும் அதற்கு தனது தந்தையிடம் இருந்து வந்த எதிர்வினையையும் பற்றி பேசியுள்ளார்.

அதில் “எந்த வீட்டிலாவது மகன் மதம் மாறப் போறான் என்று சொன்னால் அது வேறு மாதிரி வெடிக்கும். ஆனால் என் அப்பா நான் மதம் மாறப் போவதை சொன்னதும் “அவன் தினமும் ஐந்து வேலை தொழுக வேண்டும் என நினைக்கிறான். அவனை அவன் இஷ்டத்துக்கு விடுங்க” என சொல்லிவிட்டார்” என தெரிவித்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தென்னிந்தியாவில் எனக்கு எல்லாமே பிடிக்கும்… கங்கனா ரனாவத் பேச்சு!