Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தியேட்டரை கொளுத்துனா.. தீயணைப்பு கருவி வைங்க! - தக் லைஃப் வழக்கில் நீதிமன்றம் உத்தரவு!

Prasanth K
திங்கள், 9 ஜூன் 2025 (11:49 IST)

கமல்ஹாசனின் தக் லைஃப் படத்தை கர்நாடகாவில் வெளியிடுவது தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றம் இட்ட உத்தரவு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

கமல்ஹாசன், சிம்பு நடிப்பில் மணிரத்னம் இயக்கத்தில் வெளியாகியுள்ள படம் தக் லைஃப். இந்த படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய கமல்ஹாசன், கன்னட மொழிக் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதால், கர்நாடகாவில் இந்த படத்தை வெளியிட எதிர்ப்புகள் கிளம்பியது. இதனால் அங்கு படம் இன்னும் ரிலீஸ் ஆகவில்லை. மேலும் தக் லைஃப் படத்தை வெளியிடும் தியேட்டர்களை கொளுத்துவோம் என சில கன்னட அமைப்புகள் மிரட்டியுள்ளதும் பரபரப்பை ஏற்படுத்தியது.

 

இந்நிலையில் கர்நாடகாவில் கமல்ஹாசனின் தக் லைஃப் படம் வெளியாகும் தியேட்டர்களுக்கு பாதுகாப்பு வழங்கக் கோரி தியேட்டர் உரிமையாளர்கள் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மனு அளிக்கப்பட்டது.

 

இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தியேட்டர்களில் தீயணைப்பு கருவிகளை பொருத்த உத்தரவிட்டு மனுவை தள்ளுபடி செய்துள்ளனர். இதனால் தியேட்டர் உரிமையாளர்கள் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர். இதனால் தக் லைஃப் திரைப்படம் கன்னடத்தில் வெளியாவதில் மேலும் சிக்கல் எழுந்துள்ளது.

 

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

அஜித்தின் அடுத்த படம் தொடங்குவது எப்போது?... வெளியான தகவல்!

விக்ரம்மை வைத்து இயக்க இருந்த படம் என்ன ஆனது?... பிரேம்குமார் பகிர்ந்த தகவல்!

பாடலைப் பயன்படுத்த அனுமதிக் கேட்ட புதுமுக இயக்குனர்… காசே வாங்காமல் ஒரு ஃபோனையும் பரிசாகக் கொடுத்த TR!

என்ன ஆனது வினாயக் சந்திரசேகர் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கவிருந்த படம்?

வெற்றியால் தலைக்கனம் வந்துவிடக் கூடாது… லோகோ வெற்றிக்குப் பின் மகளுக்கு இயக்குனர் பிரியதர்ஷன் அறிவுரை!

அடுத்த கட்டுரையில்
Show comments