ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியாகியிருக்கும் படம் ‘சர்கார்’. சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் வெளியான இப்படத்தை விஜய் ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள்.
இந்நிலையில் சர்கார் படம் குறித்து கலவையான விமர்சனம் வருகிறது. சர்கார் படம் தொடர்பாக முன்னணி இயக்குநர் சுசீந்திரன் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ‘தளபதி’ விஜய் சார் நடிப்பில் இந்த ‘சர்கார்’ மிகச்சிறந்த அரசியல் திரைப்படம். விஜய் சாரின் நடிப்பு முருகதாஸ் சாரின் திரைக்கதை மிகநேர்த்தி. ஹாட்ரிக் வெற்றி கூட்டணிக்கு வாழ்த்துகள். இந்த மாதிரியான அரசியல் மாற்றம் நடந்தால் நல்லா இருக்கும்
இவ்வாறு சுசீந்திரன் தெரிவித்துள்ளார்.