சன் பிக்சர்ஸ் தயாரிப்பில், தளபதி விஜய் நடிப்பில், ஏ.ஆர். முருகதாஸ் இயக்கி உள்ள படம் 'சர்கார்'. இந்த திரைப்படம் உலகம் முழுவதும் நேற்று 2500க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியானது.
இப்படத்தில் கீர்த்தி சுரேஷ், ராதாரவி, வரலட்சுமி மற்றும் பலர் நடித்திருந்தனர். இந்த படத்திற்கு ஏ ஆர் ரகுமான் இசையமைத்திருந்தார்.
சர்கார் படம் நிகழ்கால அரசியல்வாதிகளை நேரடியாக தாக்கி உருவாக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் எதிர்மறையான கதாபாத்திரத்தில் நடிகை வரலட்சுமி சரத்குமார் நடித்துள்ளார். அவர் நடித்துள்ள "கோமளவல்லி" என்ற கதாபாத்திரம், தமிழக அரசியல்வாதிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஏனெனில், பெற்ற தந்தைக்கு விஷம் வைத்துக் கொள்ளும் அளவிற்கு கொடுமையான ஒரு பெண்ணாக அந்த கதாபாத்திரம் சித்தரிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் இயற்பெயர் கோமளவல்லி என்பதால் இது தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதேபோல் ராதாரவியின் நம்பர் 2 கதாபாத்திரம், ஓபிஎஸ்யை குறிக்கும் வகையில் உள்ளதாகவும் கூறுகிறார்கள்.