Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாலியல் வன்கொடுமை செய்தால் ஆணுறுப்பை அறுக்க வேண்டும்! - நடிகை சனம் ஷெட்டி ஆவேசம்!

Prasanth Karthick
ஞாயிறு, 1 செப்டம்பர் 2024 (13:02 IST)

பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் குறித்த போராட்டத்தில் கலந்து கொண்ட நடிகை சனம் ஷெட்டி, பாலியல் குற்றங்களுக்கு கடுமையான தண்டனை தேவை என பேசியுள்ளார்.

 

 

சமீபமாக கொல்கத்தா பெண் டாக்டர் வன்கொடுமை கொலை மற்றும் மலையாள சினிமா உலகில் ஹேமா அறிக்கையை தொடர்ந்து வரும் நடிகைகளின் பாலியல் புகார்கள் ஆகியவற்றால் நாடு முழுவதும் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது.

 

இந்நிலையில் நாடு முழுவதும் பல பெண்கள் அமைப்புகள் இவ்வாறான பெண்களுக்கு எதிரான வன்கொடுமை சம்பவங்கள் குறித்து குரல் எழுப்பி வருகின்றனர். அவ்வாறாக சென்னையில் பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகளை கண்டித்து தனியார் அமைப்பு வள்ளுவர் கோட்டத்தில் நடத்திய போராட்டத்தில் நடிகை ஷனம் ஷெட்டி கலந்துக் கொண்டார்.
 

ALSO READ: 13 வயது சிறுமியை வன்கொடுமை செய்து கர்ப்பமாக்கிய பள்ளி ஊழியர்! - உ.பியில் அதிர்ச்சி சம்பவம்!
 

அப்போது பேசிய அவர் “நான் நடிகை என்பதால் வெறும் பொழுதுபோக்கு பதிவுகளை மட்டும் சமூக வலைதளங்களில் பதிவிட சொல்கிறார்கள். நானும் இந்த சமூகத்தில்தான் வாழ்கிறேன். நாளைக்கு இது போன்ற விஷயங்கள் என் வீட்டில் நடந்தால் எப்படி நான் பொழுதுபோக்காக பதிவிட முடியும். இதனால் என் சினிமா வாய்ப்பு போனாலும் பரவாயில்லை. நான் தொடர்ந்து பேசுவேன்.

 

மருத்துவமனையில் ஒரு டாக்டருக்கு நடந்தது நாளை எனக்கு நடக்காது என யார் உத்தரவாதம் தர முடியும். ஹேமா அறிக்கை பரபரப்பை கிளப்பியிருக்கிறது. தந்தையே மகளை வன்கொடுமை செய்யும் சமூகத்தில் இருக்கிறோம். இதில் பெண்களுக்கு பாதுகாப்பு எப்படி இருக்கும். வன்கொடுமைகளுக்கு தூக்குத் தண்டனை கொடுத்தாலும் பத்தாது. பாலியல் வன்கொடுமை செய்பவர்களின் ஆணுறுப்பை அறுக்க வேண்டும். அதை பார்த்து யாருக்கும் இனிமேல் அப்படி செய்யும் தைரியம் வரக்கூடாது” என பேசியுள்ளார்.

 

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

நான் எழுதிய கதைகளில் விஜயகாந்த் வில்லன்… இயக்குனர் பா ரஞ்சித் பகிர்ந்த தகவல்!

நடிகை ராஷி கண்ணாவின் லேட்டஸ்ட் வைரல் ஃபோட்டோஷூட் ஆல்பம்!

ஸ்டன்னிங் லுக்கில் கலக்கலான ஃபோட்டோஷூட் நடத்திய பூனம் பாஜ்வா!

பிரபாஸ் படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடும் நயன்தாரா!

அனுஷ்காவின் அடுத்த படமான ‘காடி’ ரிலீஸ் தேதி அறிவிப்பு!

அடுத்த கட்டுரையில்