Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சென்னை வீராணம் குடிநீர் சுத்தகரிப்பு நிலையத்தில் பணிபுரியும் தொழிலாளர்கள், சம்பள உயர்வு கேட்டு வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால், சென்னை மாநகருக்கு குடிநீர் செல்வதில் சிக்கல்...

சென்னை வீராணம் குடிநீர் சுத்தகரிப்பு நிலையத்தில் பணிபுரியும் தொழிலாளர்கள், சம்பள உயர்வு கேட்டு வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால், சென்னை மாநகருக்கு குடிநீர் செல்வதில் சிக்கல்...

J.Durai

, சனி, 31 ஆகஸ்ட் 2024 (17:56 IST)
சென்னை மாநகர மக்களின் குடிநீர் தேவையை போக்கும் முக்கிய ஏரிகளில் ஒன்றாக திகழக்கூடியது கடலூர் மாவட்டத்தில் உள்ள வீராணம் ஏரி. அவ்வாறு உள்ள வீராணம் ஏரியில் சுமார் 1435 மில்லியன்  கன அடி நீர் (1.4.டி.எம்.சி) தேக்கி வைக்கப்பட்டு, சுற்றுவட்டார கிராமங்களின் பாசன தேவையை பூர்த்தி செய்வது மட்டுமில்லாமல், சென்னை வீராணம் ஏரி குடிநீர் திட்டம் மூலம், 235 கிலோமீட்டர் தொலைவில்,  ராட்சச குழாய்கள் அமைக்கப்பட்டு, சென்னை போரூருக்கு,  நாள்தோறும் 50 மில்லியன் லிட்டர் முதல் ஒரு கோடியே 80 லட்சம் லிட்டர் தண்ணீர் கொண்டு செல்லப்படுகிறது.
 
அவ்வாறு கொண்டு செல்லப்படும், வீராணம் ஏரி குடிநீரை, சுத்தகரிப்பதற்காக நெய்வேலி அருகே உள்ள வடக்குத்து பகுதியில் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட்டுள்ளது.  அவ்வாறு உள்ள சுத்தகரிப்பு நிலையத்தில்,  கடந்த 20 ஆண்டுகாலமாக பணிபுரியும் 50-க்கும் மேற்பட்ட தொழிலாளர்களுக்கு மாத ஊதியமாக 16 ரூபாய் மட்டுமே வழங்கப்படுவதால், சம்பள உயர்த்தி தர வேண்டுமென பலகட்ட பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். 
 
அதன் ஒரு பகுதியாக கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு, நடந்த பேச்சு வார்த்தையில் ஆறாயிரம் ரூபாய் உயர்த்தி வழங்கப்படும் என  முடிவு எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் பேச்சுவார்த்தையில் கூறிய சம்பள உயர்வை வழங்காமல் அதிகாரிகள், அலட்சியமாக செயல்படுகாக கூறி, நெய்வேலி வடக்குத்துப் பகுதியில் அமைந்துள்ள சென்னை வீராணம் குடிநீர் சுத்தகரிப்பு  நிலையத்தில்,  பணிபுரியும் 54 தொழிலாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 
மேலும் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் தொழிலாளர்களிடம், நெய்வேலி வடகுத்து காவல்துறையினர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வரும் நிலையில், பேச்சுவார்த்தை சுமூகமான தீர்வு எடுக்காவிட்டால்,  சென்னைக்கு செல்லக்கூடிய ஒரு கோடியே 80 லட்சம் லிட்டர் தண்ணீரை நிறுத்துவோம் எனவும், சுத்திகரிப்பு நிலையத்தில் 24 மணி நேரத்திற்கு ஒருமுறை கெமிக்கலை பயன்படுத்தி தண்ணீரை சுத்தப்படுத்தும் பணியை செய்ய மாட்டோம் எனவும், பவர் சப்ளை நின்றாலோ? தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டாலோ ? எதையும் செய்ய  மாட்டோம் என எச்சரிக்கை விடுத்துள்ளனர். 
 
தொழிலாளர்களின் போராட்டத்தால்,  சென்னை மாநகர மக்களுக்கு,  குடிநீர் செல்வதில் சிக்கல் ஏற்படும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளதால்,  தொழிலாளர்களின் கோரிக்கையை உடனடியாக நிறைவேற்ற வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

காவல் துறையினரிடம் குறைகளை கேட்டறிந்த டி.ஜிபி.சங்கர் ஜிவால்!