Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சி,வி குமாரின் அடுத்த பட டைட்டில் அறிவிப்பு

சி,வி குமாரின் அடுத்த பட டைட்டில் அறிவிப்பு
, வெள்ளி, 1 பிப்ரவரி 2019 (21:35 IST)
அட்டக்கத்தி, பீட்சா, சூதுகவ்வும், உள்பட பல வெற்றிப்படங்களை தயாரித்த தயாரிப்பாளர் சி,வி குமார் கடந்த 2017ஆம் ஆண்டு 'மாயவன்' என்ற படத்தை இயக்கினார். அதன்பின் தற்போது 4ஜி, டைட்டானிக் காதலும் கவிழ்ந்து போகும் ஆகிய படங்களை தயாரித்தும், 'கேங்ஸ் ஆப் மெட்ராஸ் என்ற படத்தை இயக்கியும் வருகிறார்.

இந்த நிலையில் தற்போது அவர் மேலும் ஒரு படத்தை தயாரிக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்திற்கு ''ஜோங்கோ' ' என்ற டைட்டிலும் அறிவித்து இந்த படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டரையும் சிவி குமார் வெளியிட்டுள்ளார்.

webdunia
மனோ கார்த்திக் இயக்கும் இந்த படத்திற்கு ஷ்யாமங்கலன் இசையமைக்கின்றார். கார்த்திக் தில்லை ஒளிப்பதிவில் ராதாகிருஷ்ணன் தனபால் படத்தொகுப்பில் கோபி ஆனந்த் கலை இயக்கத்தில், ஹரி தினேஷ் ஸ்டண்ட் இயக்கத்தில் இந்த படம் உருவாகவுள்ளது.

மேலும் இதுவரை '24', 'இன்று நேற்று நாளை என டைம்லூப் படமாக ஆக்சன் படங்களே வெளிவந்து கொண்டிருந்த நிலையில், இந்த படம் முதல் ஃபேமிலி டைம்லூப் படம் என்பது குறிப்பிடத்தக்கது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தயாரிப்பாளர் சங்கத்தின் பதவியில் இருந்து திடீரென விலகிய பார்த்திபன்!