Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ரஜினியை வைத்து படம் இயக்குவேன் – தேசிங்கு பெரியசாமி தகவல்

ரஜினியை வைத்து படம் இயக்குவேன் – தேசிங்கு பெரியசாமி தகவல்
, திங்கள், 8 ஆகஸ்ட் 2022 (17:13 IST)
தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவர் நடிப்பில் கடைசியாக வெளியான படம் அண்ணாத்த. இப்படத்தை சிறுத்தை சிவா இயக்கியிருந்தார். 

இப்படத்தை அடுத்து, கோலமாவு கோகிலா, டாக்டர், பீஸ்ட் படங்களை இயக்கிய நிலையில், இவர் இயக்கத்தில் ரஜினி ஜெயிலர் என்ற படத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தில் ரஜினிக்கு ஜோடியாக ஐஸ்வர்யா ராய், ரம்யா கிருஷ்ணன் உள்ளிட்ட நடிகர்கள் நடிக்கவுள்ளனர்.

இந்த நிலையில், நடிகர் துல்கர் சல்மான்  நடிப்பில் வெளியான கண்ணும் கண்ணும் கொள்ளை அடித்தால் என்ற படத்தை இயக்கிய தேசிங்கு பெரியசாமிக்கு ரஜினி பாராட்டிய ஆடியோ வெளியான நிலையில், இவர் இயக்கத்தில் ரஜினி நடிப்பதாகத் தகவல் வெளியானது.

இந்த நிலையில், சமீபத்தில் பேட்டியளித்த தேசிங்கு பெரியசாமி, சூப்பர் ஸ்டார் ரஜினியை வைத்து எதிர்காலத்தில் ஒரு படம் இயக்குவேன் என தெரிவித்துள்ளார், இதனால் ரஜினி ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

காமெடி நடிகர் சதீஸுக்கு விருது....