தற்போது உலகம் முழுவதும் ஏஐ பயன்பாடு அதிகரித்து மனித உழைப்புக்கான தேவை குறைந்து வரும் நிலையில் இதுகுறித்து தான் 1980களிலேயே எச்சரித்ததாக ஹாலிவுட் இயக்குனர் ஜேம்ஸ் கேமரூன் கூறியுள்ளார்.
ஹாலிவுட் இயக்குனரான ஜேம்ஸ் கேமரூன் டெர்மினேட்டர், டைட்டானிக், அவதார் என பல உலக புகழ் பெற்ற படங்களை இயக்கியவர். தற்போது அவதாரின் 5 பாக படங்களை இயக்கி வரும் இவர் அடுத்து ஹிரோஷிமா குண்டு வெடிப்பை மையப்படுத்திய ஒரு படத்தையும் இயக்க உள்ளார்.
தற்போது உலகம் முழுவதும் ஏஐ பயன்பாடு அதிகரித்துள்ளதையும், தான் இயக்கிய டெர்மினேட்டர் படத்தையும் ஒப்பிட்டு ஜேம்ஸ் கேமரூன் பேசியுள்ளார். அதில் அவர் “நான் 1984லேயே உங்களை எச்சரித்தேன். நீங்கள் அதை கவனிக்கவில்லை. எதிர்காலத்தில் மனிதர்களுக்கு பதிலாக கணினிகள் சிந்திப்பது மனிதகுலத்திற்கே எதிரானதாக முடியும் என்ற கருத்தைதான் டெர்மினேட்டர் படம் பேசுகிறது. எதிர்காலத்தில் கணினிக்கும் கணினிக்கும் இடையே நடக்கும் டிஜிட்டல் யுத்தத்தால் மனிதர்கள் பாதிக்கப்படுவார்கள். நமக்கு பதிலாக நாம் படைத்த ஒன்று நமக்கான முடிவுகளை எடுத்தால் என்ன ஆகும்?” என கேள்வி எழுப்பியுள்ளார்.
Edit by Prasanth.K