Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

70000க்கு வாங்கி 5 லட்சம் லாபம் பார்த்தேன்.. பாரதிகண்ணனுக்கு ஜாக்பாட் அடித்த படம்

Advertiesment
Barathi kannan

Bala

, திங்கள், 24 நவம்பர் 2025 (15:16 IST)
சமீபகாலமாக பாரதிகண்ணனின் பேட்டி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது. குறிப்பாக நடிகர் கார்த்திக்கை பற்றி அவர் பேசியது பெரும் பேசு பொருளாக மாறியது. அது கார்த்திக்கின் ரசிகர்களை வருத்தத்திலும் ஆழ்த்தியது. பல ஊர்களில் இருந்தும் கார்த்திக் ரசிகர்கள் பாரதிகண்ணனுக்கு போன் செய்து செல்லமாக மிரட்டினார்கள் என்றும் ஒரு பேட்டியில் பாரதிகண்ணன் கூறியிருக்கிறார்.
 
ஆனாலும் இன்னும் சினிமாவில் தனக்கு ஏற்பட்ட அனுபவங்களை பகிர்ந்து வருகிறார். தற்போது சன் டிவியில் ஒளிபரப்பாகும் ஒரு தொடரில் பாரதிகண்ணன் நடித்து வருகிறார். நடிகராகவும் பல படங்களில் நடித்த பாரதி கண்ணன் திருநெல்வேலி படத்தை எடுத்தவர். இந்த நிலையில் கரகாட்டக்காரன் படம் தொடர்பாக ஒரு விஷயத்தை பகிர்ந்திருக்கிறார். கங்கை அமரன் இயக்கத்தில் ராமராஜன் நடித்த படம் தான் கரகாட்டக்காரன்.
 
இந்தப் படம் வெளியாகி கிட்டத்தட்ட 250 நாள்களுக்கு மேலாக ஓடிய வெற்றிப்படம். தில்லான மோகனாம்பாள் படத்திற்கு பிறகு அதே பேட்டர்னில் உருவான படம்தான் கரகாட்டக்காரன். இளையராஜா இசையில் படத்தில் அமைந்த அனைத்து பாடல்களும் சூப்பர் டூப்பர் ஹிட். இந்த நிலையில் அந்தப் படத்தால் எனக்கு 5 லட்சம் லாபம் என கூறியிருக்கிறார் பாரதிகண்ணன். இதோ அவர் கூறியது.


webdunia























கரகாட்டக்காரன் படத்துக்கு படத்தோட பிரிவியூ ஷோவை பார்க்க ராமராஜன் சார் என்னை அழைத்தார். படம் பார்த்துவிட்டு ‘எப்படி இருக்கு பாரதினு’ கேட்டார். படம் 50 வாரம் போகும்னு சொன்னேன். ஆனா அவரு நீங்க வேற, 5 வாரம் தான் போவும்னு சொன்னார். 7 லட்ச ரூபா சம்பளம் கொடுக்க முடியாமல் படத்தோட ரைட்ஸை கொடுத்து இருக்காங்க. நீங்க ஏதாவது ஏரியாவில் ரிலீஸ் பண்றீங்களானு கேட்டார்.
 
சரினு நானும் 70000 கொடுத்து படத்தை வாங்கி ஒரு மூணு தியேட்டரில் ரிலீஸ் பண்ணேன். ரிலீஸூக்கு அப்புறம் எனக்கு லாபம் மட்டும் 5 லட்சம் கிடைத்தது என அந்த பேட்டியில் பாரதிகண்ணன் கூறினார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

விஜய் சேதுபதி- பூரி ஜெகன்னாத் படத்தின் ஷூட்டிங் நிறைவு!