விஜய் நடித்த லியோ திரைப்படம் வெளியாக இன்னும் மூன்று நாட்கள் மட்டும் இருக்கும் நிலையில் சென்னையில் உள்ள பெரிய திரையரங்குகளில் இன்னும் முன்பதிவு தொடங்காதது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சென்னை காசி தியேட்டர் தவிர மற்ற தியேட்டர்களில் இன்னும் முன்பதிவு தொடங்கவில்லை. இதற்கு காரணமாக அதிக இருக்கைகள் கொண்ட திரையரங்குகளில் இதுவரை இல்லாத அளவில் முதல் வார வசூலில் 75% தயாரிப்பு நிறுவனம் கேட்பதாக தகவல் வெளியாகி உள்ளன.
வசூலில் 75 சதவீதத்தை தயாரிப்பு நிறுவனத்திற்கு கொடுத்தால் திரையரங்கு உரிமையாளர்களுக்கு நஷ்டம் ஏற்படும் என்று திரையரங்கு உரிமையாளர்கள் இன்னும் லியோ படத்தை திரையிடுவதற்கான ஒப்பந்தம் செய்யவில்லை என்று கூறப்படுகிறது.
இந்த நிலையில் திட்டமிட்டபடி லியோ ரிலீசாகுமா? அல்லது பேச்சு வார்த்தை மூலம் தீர்வு காணப்படுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.