ரஜினி ரசிகர்களின் போராட்டத்திற்கு காவல்துறை அனுமதி
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அரசியல் கட்சி தொடங்கி ஆன்மீக அரசியலை மக்களிடையே அறிமுகப்படுத்துவார் என்று எதிர்பார்த்துக் கொண்டிருந்த நிலையில் திடீரென அரசியல் கட்சியைத் தொடங்கப் போவது இல்லை என ரஜினிகாந்த் அறிக்கை ஒன்றின் மூலம் அறிவித்தார்
ரஜினியின் இந்த முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து ரஜினி ரசிகர்கள் இன்று சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே அமைதியான ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்த உள்ளனர். இதற்காக நேற்றே தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்து பேருந்துகள் மற்றும் வேன்களில் ரஜினி ரசிகர்கள் சென்னைக்கு வந்து குவிந்து உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது
இந்தநிலையில் இந்த ஆர்ப்பாட்டத்திற்கு ரஜினி ரசிகர்கள் முறைப்படி காவல்துறையிடம் அனுமதி கேட்டதாகவும் அதற்கு காவல்துறை 36 நிபந்தனைகளுடன் அனுமதி அளித்துள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது. அமைதியான முறையில் ஆர்ப்பாட்டம் நடைபெற வேண்டும், சரியான நேரத்தில் ஆரம்பித்து சரியான நேரத்தில் முடித்துக் கொள்ள வேண்டும், மக்களுக்கு எந்தவிதமான இடையூறும் ஏற்படுத்தக் கூடாது உள்ளிட்ட 36 நிபந்தனைகளை காவல்துறை வைத்திருப்பதாகவும் இதில் எந்த ஒரு நிபந்தனையை மீறினாலும் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் காவல்துறை தெரிவித்துள்ளது
இந்த நிலையில் இன்று அமைதியான முறையில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்தை அடுத்து ரஜினிகாந்த் மனம் மாறி மீண்டும் அரசியலுக்கு வருவாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்