Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
Saturday, 12 April 2025
webdunia

நடிகர் விவேக்கிற்கு கிடைத்த கவுரவம் !

Advertiesment
Honor to actor Vivek
, திங்கள், 18 ஏப்ரல் 2022 (21:03 IST)
தமிழ் சினிமாவில் 30 ஆண்டு காலம் தன் தனித்த சிந்தனையாலும், நடிப்பாலும் சமூக விழிப்புணர்வு வசனங்களாலும் சின்னக் கலைவாணர் என அழைக்கப்பட்டவர் நடிகர் விவேக்.

இவர் கடந்த ஆண்டு ஏப்ரல் 17 ஆம் தேதி அன்று இறந்தார். இது சினிமாத்துறையினர், ரசிகர்கள் மற்றும் மக்களிடைய அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இவரது முதலாம் ஆண்டு நினைவு நாள்  நேற்று அனுசரிக்கப்பட்டது.

அப்போது, அவர்து உருவப் படத்தை தென்னிந்திய நடிகர் சங்க துணைத்தலைவர்  பூச்சி எஸ் . முருகன், செங்கல்பட்டு எஸ் .பி அரவிந்தன் அவர்களும் திறந்து வைத்தனர்.

அப்போது, நடிகர் விவேக்கின் நண்பரும்  நடிகருமான    செல்முருகன் விவேக்கின் கனவான கிரீன் கலாம் ஒரு கோடி மரங்கள்  நடும் திட்டத்தை தொடரும் வகையில் ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் நண்பர்கள் துணையுடன் தொடங்கினார். திரைப்படம் வெளியாகவுள்ளதால் அவரது ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

 நிகழ்ச்சியில் பேசிய  நடிகர் சங்க துணைத்தலைவர் பூச்சி முருகன், நடிகர் விவேக் இல்லை என்பதை நினைத்துப்பார்க்கவே முடியவில்லை.  சமூகத்திற்கு நல்ல கருத்துகளை விதைத்தவர். தமிழகம் முழுவதும் மரங்கன்றுகளை விதைத்தவர். அந்த மரங்களின் வழியே நம்மோடு அவர் வாழ்ந்துகொண்டிருப்பார்.   காலையில், முதல்வர் ஸ்டாலினிடம் சென்னையில் ஒரு தெருவுக்கு விவேக் பெயரை வைக்க வேண்டுமென கேட்டுக்கொண்டேன். அதற்கு அவர்  உரிய முறையில் கடிதம் கொடுத்தால் நிச்சயமாக செய்யலாம் என முதல்வர் கூறியதாகத் தெரிவித்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

‘கேஜிஎஃப் 3’ படத்தின் பணிகள் தொடக்கம்: வைரலாகும் புகைப்படம்!