Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

நானி - நஸ்ரியா படத்தின் டீசர் தேதி ரிலீஸ் தேதி அறிவிப்பு

Advertiesment
nani -nasriya
, திங்கள், 18 ஏப்ரல் 2022 (17:29 IST)
நடிகர்  நானி -  நஸ்ரியா  நடிப்பில் உருவாகியுள்ள அடடே சுந்தரம் படத்தின் டீசர் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2013 ஆம் ஆண்டு வெளியான நேரம் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர்  நஸ்ரியா. இயக்குநர் அட்லியின் ராஜா ராணியில்  இவரது நடிப்பில் அனைவராலும் பாராட்டப்பட்டது.

அதன்பின், நையாண்டி, வாயை மூடிப் பேசவும் உள்ளிட்ட படங்களில் நடிதுள்ளார்.  சில ஆண்டுகளுக்கு முன் மலையாள நடிகர் பகத் பாசிலை திருமணம் செய்துகொண்டு  சினிமாவை விட்டு விலகியிருந்த நிலையில், கடந்த 2018 ஆண்டு பிரித்விராஜின் கூடே என்ற படத்தின் ரீ எண்ட்ரி கொடுத்தார்.

இந்நிலையில், நானி நடிப்பில் உருவாகியுள்ள அண்டி சுந்தராகினி என்ற படத்தில் அவருக்கு ஜோடியாக நஸ்ரியா நடித்துள்ளார். இப்படம் தமிழ், மலையாள, உள்ளிட்ட மொழிகளிலும் டப் செய்யப்பட்டுள்ளது, இ ந் நிலையில், தமிழில் அடடே சுந்தரம் என பெயரிடப்பட்டு ஜூன் 10 ஆம் தேதி ரிலீஸாகவுள்ள நிலையில், இப்படத்தின் டீசர் வரும் 20 ஆம் தேதி வெளியாகும் எனப் படக்குழு அறிவித்துள்ளது.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பிரபல நடிகையின் சுயசரிதை புத்தகம் வெளியீடு