Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

என்னைக் கிண்டல் செய்பவர்களுக்கு என் பாடல்களே பதில் – ஹிப்ஹாப் ஆதி கருத்து!

Advertiesment
என்னைக் கிண்டல் செய்பவர்களுக்கு என் பாடல்களே பதில் – ஹிப்ஹாப் ஆதி கருத்து!
, வெள்ளி, 14 ஆகஸ்ட் 2020 (10:47 IST)
சமீபத்தில் இணையத்தில் அதிகமாக ஹிப் ஹாப் ஆதியின் பாடல்கள் இணையத்தில் அதிகளவில் கலாய்க்கப்பட்டு வருகின்றன.

தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமான ஹிப் ஹாப் ஆதி தற்போது கதாநாயகனாகவும் முன்னேற்றம் அடைந்து வெற்றி படங்களை கொடுத்து வருகிறார். ஆனாலும் இண்டிபெண்டண்டாக நான் ஒரு ஏலியன் என்ற ஆல்பத்தை யுடியூப் தளத்தில் ஆகஸ்ட் 15 ஆம் தேதி வெளியிட இருக்கிறார். அதற்கான ப்ரோமா பாடலும் வெளியாகி வரவேற்பைப் பெற்றுள்ளது.

இந்நிலையில் இது சம்மந்தமாக அவர் ஆங்கில ஊடகத்துக்கு அளித்த நேர்காணலில் அவரைப் பற்றி அகாடமி அவார்ட் என்ற பெயரில் கலாய்த்திருந்த ஜெகன்  கிருஷ்ணன் வீடியோ பற்றி கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த ஆதி ‘என்னைப் பற்றிய கேலிகளுக்கு எனது சமீபத்திய பாடல்களே பதில். ஆன்லைன் உலகில் எல்லோரும் தங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பதால் ஏற்படும் கவனச்சிதைவு இது. சுஷாந்த் சிங்கின் தற்கொலை பற்றி வருத்தமாகப் பதிவிட்டு, அடுத்த நிமிடம் ஒருவரைக் கிண்டல் செய்யும் நபர்களும் இருக்கின்றனர். ’ எனக் கூறியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இந்த அடக்கம் போதுமா...? கொக்கரித்த கோலிவுட்டை அடக்கிய ஐஸ்வர்யா ராஜேஷ்!