Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஹிட் இயக்குனருடன் கூட்டணி அமைக்கும் ஹிப்ஹாப் ஆதி..!

Advertiesment
Kadaisi Ulaga Por

vinoth

, வியாழன், 3 ஏப்ரல் 2025 (08:44 IST)
தமிழ் சினிமா உலகில் இசையமைப்பாளராக அறிமுகமாகி நடிகராக வலம் வருபவர் ஹிப்ஹாப் ஆதி. இவர் நடித்த முதல் படமான ‘மீசைய முறுக்கு’ படத்தை இவரே இயக்கி, நடித்தும் இருந்தார். அதன்பின்னர் பல படங்களில் நடித்தவர் நீண்ட காலம் படம் நடிக்காமல் இருந்து, பின்னர் சமீபத்தில் ‘பிடி சார்’ என்ற அவருடைய படம் ரிலீஸாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றது.

இந்த படத்தைத் தொடர்ந்து அவர் மீண்டும் இயக்கிய படமான ‘கடைசி உலகப்போர்’ கடந்த ஆண்டு வெளியாகி படுதோல்வி படமாக அமைந்தது. அதனால் இந்த படத்தைத் தயாரித்த வகையில் ஆதிக்கு மிகப்பெரிய பொருளாதார நஷ்டம் ஏற்பட்டிருக்கும் என சொல்லப்படுகிறது.

இந்நிலையில் இப்போது அவர் ‘ஜோ’ என்ற வெற்றிப் படத்தைக் கொடுத்த இயக்குனர் ஹரிஹரன் ராம் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார். இந்த படத்தை ப்ரமோத் பிலிம்ஸ் என்ற நிறுவனம் தயாரிக்கவுள்ளது. ஜூன் மாதத்தில் படப்பிடிப்புத் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இளையராஜா இசை நிகழ்ச்சி… மாற்று திறனாளிகளுக்கு இலவச டிக்கெட்!