Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிச்சைக்காரன் & ருத்ரன் படத்தோடு மோதுகிறதா ஹிப்ஹாப் ஆதியின் ‘வீரன்’?

Webdunia
சனி, 18 மார்ச் 2023 (08:30 IST)
தமிழ் திரை உலகின் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவரான ஹிப்ஹாப் தமிழா ஆதி ’மீசையை முறுக்கு’ என்ற திரைப்படத்தின் மூலம் கடந்த 2017ஆம் ஆண்டு ஹீரோவானார். அதன் பின்னர் அவர் நடித்த நட்பே துணை மற்றும் நான் சிரித்தால் ஆகிய திரைப்படங்கள் நல்ல வரவேற்பைப் பெற்றன என்பது குறிப்பிடத்தக்கது இந்த நிலையில் அவர் நடிப்பில் சிவகுமாரின் சபதம் மற்றும் அன்பறிவு ஆகிய படங்கள் ரிலீஸாகி தோல்வி அடைந்தன. அதையடுத்து தற்போது அவர் மரகத நாணயம் படத்தின் இயக்குனர் ARK சரவண் இயக்கத்தில் உருவாகும் வீரன் என்ற திரைப்படத்தில் நடிக்கிறார். இந்த படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

இந்த படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடந்து முடிந்துள்ள நிலையில் ஏப்ரல் 14 ஆம் தேதி ரிலீஸ் ஆக அதிக வாய்ப்புகள் உள்ளதாக சொல்லப்படுகிறது. அதற்கான வேலைகளை தயாரிப்பு நிறுவனம் தொடங்கியுள்ளதாக சொல்லப்படுகிறது. அதே தேதியில்தான் விஜய் ஆண்டனியின் பிச்சைக்காரன் 2 மற்றும் ராகவா லாரன்ஸின் ருத்ரன் ஆகிய திரைப்படங்களும் ரிலீஸ் ஆகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஸ்டைலிஷான உடையில் கலக்கலானப் போஸில் ஆண்ட்ரியா… வைரல் க்ளிக்ஸ்!

சுருள்முடி அழகி அனுபமா பரமேஸ்வரனின் அழகிய க்ளிக்ஸ்!

கார்த்தி அடுத்த படத்திற்காக ஒரு கிராமத்தையே செட் போடும் கலை இயக்குனர்.. இயக்குனர் யார்?

எனக்கு இந்தில நடிக்கணும்னு தோனல.. ஏனென்றால்? – சிம்ரன் பகிர்ந்த தகவல்!

’ஜனநாயகன்’ இசை வெளியீட்டு விழாவில் ஒரு புதுமை.. விஜய்யின் ராஜதந்திரம் எடுபடுமா?

அடுத்த கட்டுரையில்
Show comments