Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஹிப் ஹாப் ஆதியோடு இணைந்த யுவன்… காஃபி வித் காதல் அடுத்த சிங்கிள் அப்டேட்!

ஹிப் ஹாப் ஆதியோடு இணைந்த யுவன்… காஃபி வித் காதல் அடுத்த சிங்கிள் அப்டேட்!
, சனி, 6 ஆகஸ்ட் 2022 (13:22 IST)
யுவன் இசையமைத்துள்ள காபி வித் காதல் திரைப்படம் ரசிகர்கள் எதிர்பார்க்கும் திரைப்படமாக அமைந்துள்ளது.

சுந்தர் சி யின் படங்களுக்கு என்றே ஒரு குறிப்பிட்ட ரசிகர் கூட்டம் உண்டு. வழக்கமாக காமடிக்கு முக்கியத்துவம் கொடுத்து படங்களை உருவாக்கும் சுந்தர் சி, கடந்த சில ஆண்டுகளாக பேய் படங்களாக எடுத்து ரசிகர்களை கொஞ்சம் ஏமாற்றமளித்தார். இந்நிலையில் இப்போது மீண்டும் தன்னுடைய பழைய ரூட்டுக்கே திரும்பியுள்ள அவர் ஜீவா, ஜெய் மற்றும் ஸ்ரீகாந்த் ஆகிய மூன்று ஹீரோக்களை வைத்து ஒரு காமெடி படத்தை இயக்கியுள்ளார்.

இந்த திரைப்படத்தில் யோகி பாபு, திவ்யதர்ஷினி உள்ளிட்டோரும் நடித்துள்ளனர். சென்னையில் தொடங்கிய படப்பிடிப்பு சமீபத்தில் ஊட்டியில் நிறைவுற்றது. இந்த படத்துக்கு ‘காஃபி வித் காதல்’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த படத்தின் முதல் சிங்கிள் பாடல் நாளை வெளியாக உள்ளது. வின்னர் படத்துக்கு பின்னர் 19 ஆண்டுகளுக்குப் பிறகு யுவன் ஷங்கர் ராஜா – சுந்தர் சி கூட்டணி இந்த திரைப்படத்தில் இணைந்துள்ளதால் பாடல்கள் மீது எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ளது. 

ஏற்கனவே இந்த படத்தில் இருந்து இரண்டு பாடல்கள் வெளியாகி இணையத்தில் கவனம் பெற்றன. அதில் ஒரு பாடல் மைக்கேல் மதன காமராஜன் படத்தில் இடம்பெற்ற ரம் பம் பம் ஆரம்பம் பாடலின் ரீமிக்ஸ் ஆகும். இந்நிலையில் மூன்றாவது சிங்கிள் பாடலான ‘தியாகி பாய்ஸ்’ பாடல் ஆகஸ்ட் 8 ஆம் தேதி முதல் வெளியாகியுள்ளது. இந்த பாடலை ஹிப் ஹாப் ஆதி எழுதி, யுவனுடன் இணைந்து பாடியுள்ளதாக சொல்லப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

‘லோன் வொல்ஃப் தயார்… நீங்கள் தயாரா?’ தி கிரே மேன் பார்ட் 2 பற்றி தனுஷ் அப்டேட்!