Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

‘லோன் வொல்ஃப் தயார்… நீங்கள் தயாரா?’ தி கிரே மேன் பார்ட் 2 பற்றி தனுஷ் அப்டேட்!

‘லோன் வொல்ஃப் தயார்… நீங்கள் தயாரா?’ தி கிரே மேன் பார்ட் 2 பற்றி தனுஷ் அப்டேட்!
, சனி, 6 ஆகஸ்ட் 2022 (13:17 IST)
தனுஷ் நடிப்பில் உருவான தி கிரே மேன் திரைப்படம் மோசமான விமர்சனங்களை சந்தித்தது.

அவெஞ்சர்ஸ் இயக்குனர்களான ரஸ்ஸோ சகோதரர்கள் இயக்கும் நெட்பிளிக்ஸ் திரைப்படமான ’தி கிரே மேன்’ என்ற திரைப்படத்தில் நடித்துள்ள முக்கிய நட்சத்திரங்களில் தனுஷும் ஒருவர் என்ற அறிவிப்போடுதான் படம் தொடங்கப்பட்டது. தி கிரே மேன் படத்தில் தனுஷை பார்க்க இந்திய ரசிகர்கள் ஆர்வமாக இருந்தனர்.

பலத்த எதிர்பார்ப்புகளுக்கு நெட்பிளிக்ஸில் ஜூலை 22 ஆம் தேதி நேரடியாக வெளியானது தி கிரே மேன். ஆனால் ரசிகர்களை திருப்திப் படுத்தவில்லை. மிக மோசமான விமர்சனங்களைப் பெற்றது. இந்தியாவில் தனுஷுக்காக படத்தை எதிர்பார்த்த ரசிகர்களுக்கு “மை செக்ஸி தமிழ் பிரண்ட்” என்ற வசனம்தான் மிஞ்சியது. ‘வாம்மா மின்னல் போல’ வந்து போனார் தனுஷ். இப்படி மோசமான விமர்சனங்களைப் பெற்றாலும், நெட்பிளிக்ஸ் தளத்தில் அதிக பார்வையாளர்களால் இந்த படம் பார்க்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்நிலையில் இந்த படத்தின் இரண்டாம் பாகம் உருவாக உள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. அதை உறுதிப்படுத்தும்  விதமாக தனுஷ் “தி கிரே மேன் உலகம் விரிவடைகிறது. லோன் வொல்ஃப் தயார். நீங்கள் தயாரா?” என தனது சமூகவலைதளப் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இரண்டாவது பாகத்திலாவது தனுஷுக்கு முக்கியத்துவம் இருக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

’விருமன்’ இசை விழாவுக்கு எனக்கு அழைப்பு கூட இல்லை: பாடலாரிசியர் சினேகன் வருத்தம்!